ஆட்சியா நடத்துறீங்க என திமுகவுக்கு எதிராக கொந்தளித்த ஆட்டோ ஓட்டுநர்கள்! திமுகவினர் ஆட்சிக்கு வந்து சரியாக இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன, குறிப்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பெண்கள் போக்குவரத்து, கழகத்தினர் ஆகியோர் முதல்வர் கொடுத்த வாக்குறுதி எங்கே? எப்போது நிறைவேற்றுவார்? எனக் கேட்டு வருகையில் நாளுக்கு நாள் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. இந்த நிலையில் திமுகவினருக்கும் முதல்வருக்கும் எதிராக போராடுவோர்கள் பட்டியலில் தற்போது ஆட்டோ ஓட்டுனர்களும் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் திமுகவினரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, திமுக ஆட்சிக்கு வந்தால் புதிதாக ஆட்டோ வாங்குபவர்களுக்கு ரூபாய் 10,000 மானிய தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு அவர்கள் கூறிய வாக்குறுதியை இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை நிறைவேற்றவில்லை எனவும், மேலும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மே 9 ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.
இதில் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சி ஐ டி யு மாநில செயலாளர் எஸ் கே மகேந்திரன் அவர்களின் முன்னிலையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிஐடியு மாநிலத் துணை பொதுச்செயலாளர் வி குமார் மற்றும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம் சிவாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர், இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன் கூறியதாவது, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவதோடு, அதனை மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து அதை கண்காணிக்க வேண்டும் என கடந்த 2022 பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் மே மாதம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூபாய் 25 மற்றும் அடுத்தடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூபாய் 20 கட்டணம் வசூலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தோம். ஆனால் இதுவரை கட்டணம் உயர்த்தப்படவில்லை, நீதிமன்றம் கூறியவாறு அரசு நுகர்வோர் ஆட்டோ சங்கத்தினர் அடங்கிய முத்தரப்பு குழுவையும் அரசு அமைக்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது, இதை கருத்தில் கொண்டு தான் மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், மேலும் வாடகை வாகனங்களை முன் பதிவு செய்ய அரசு ஒரு செயலியை தொடங்க வேண்டும், இதன் மூலம் அரசுக்கும் வருவாய் வரும், மக்களும் குறைந்த கட்டணத்திலும் பயணம் செய்ய இயலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் தொழில் உத்தரவாதம் கிடைக்கும் என கூறினோம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் மளிகை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை இருசக்கர வாகனங்களில் வைத்து விநியோகம் செய்பவர்கள் அதிகம் விபத்தில் சிக்கி இறக்கின்றனர். குறிப்பாக பைக் டாக்ஸியில் செல்போர்கள் விபத்துக்கு உள்ளாகி உயிரிழப்பு அதிகரித்து வருகிறது, அந்த வாகனத்துக்கு பொது போக்குவரத்துக்கான அனுமதி கிடையாது என்பதால் அதில் பயணிப்போருக்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறினர்.
எனினும் இப்போது வரை பைக் டாக்ஸி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன இதை முறைப்படுத்த வேண்டும் மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பைக் டாக்ஸிகள் இயங்குகின்றன, நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக வாக்களித்த திமுக தமிழகத்தில் இதை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அது மட்டுமில்லாமல் திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் 10,000 வழங்குவோம் என்பதையும் கருத்தில் கொண்டு அதனையும் உடனே அமல் படுத்த வேண்டும் எனக்கு கூறி போராட்டம் நடத்தினர்.
இப்படி கள அளவில் ஆட்டோ ஓட்டுனர்கள் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்டு போராட்டத்தில் இறங்கியதால், வெகுவிரைவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம் மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்வது என திமுக அரசு தற்போது யோசித்து வருகிறது.