புதுதில்லி : தேசத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டை கவனத்தில்கொண்டும் தேசப்பற்றுள்ள ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்திய பாதுகாப்புப்படையில் சேர அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மாணவரமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வன்முறையில் இறங்கினர்.
இந்நிலையில் போராட்டத்தை தூண்டிய காங்கிரஸ் மாணவரணி அமைப்பு தலைவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அக்னிபாத் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் போர்டல் திறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சேர முதல்நாளில் 3800 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்க்கு முன்தினம் தான் விமானப்படை அதன் இரண்டுக்கட்ட ஆட் சேர்ப்பு செயல்முறை மற்றும் அதன் பதிவு அட்டவணை குறித்த விவரங்களை வெளியிட்டிருந்தது. இதனிடையே ஆன்லைன் தற்போது பொதுப்பயனாளர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணைகளில் குறிப்பிட்டபடி முதல்கட்டத்திற்கான பதிவுசாளரம் ஜூலை 5 அன்று மூடபப்டும்.
இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூலை கடைசி வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்றும் நவம்பர் மாதம் மருத்துவப்பணிகள் நடைபெறும் எனவும் அதன் முடிவுகள் மற்றும் சேர்க்கை செயல்முறை அடுத்த மாதம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பாட பயிற்சி வகுப்புகள் இந்த வருட இறுதியில் நடைபெறும்.
அக்னிபாத் திட்டத்தில் சேர தகுதிகள் விண்ணப்பதாரர் ஒரு இந்திய குடிமகனாக இருக்கவேண்டும். அல்லது இந்திய விமானப்படையின் NC(E) ஆக இருக்கவேண்டும். மேலும் இந்திய குடிமகனாக இருந்தால் திருமணமாகாத ஆணாக இருக்கவேண்டும். இந்த ஆண்டிற்குள் பாதுகாப்பு படையில் 46000 அக்னிவீரர்களை இணைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.