24 special

சீனாவுடன் தொடர்பு..! சிக்கும் ஆடிட்டர்கள்..?


புதுதில்லி : இந்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமான எம்சிஏ பலமுறை எச்சரித்திரித்திருந்தபோதும் சீன குடிமக்களுக்கு உதவும் நிறுவன ஆடிட்டர்கள் மற்றும் நிறுவன செயலாளர்களான CS களின் பணத்தின் மீதான மோகத்தால் சீனாவின் PLA கட்டுப்பாட்டில் உள்ள இந்தியாவில் செயல்பட்டு வரும் ஷெல் நிறுவனங்களுக்கு பணிபுரிந்து வருவதால் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைகின்றனர்.


இந்த சீன ஷெல் நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் தரவுகள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை PLA தொடர்ந்து திருடிவருகிறது. இந்த செயல்பாடுகள் இந்திய பொருளாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது. சீனாவால் தொடங்கப்பட்ட பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பயன்படுத்தி சிறிய ஷெல் நிறுவனங்களை உருவாக்குகின்றன.

அதற்க்கு ஆடிட்டர்கள் மற்றும் சிஎஸ்கள் துணைபுரிகின்றனர். இதற்காக அவர்கள் கணிசமான தொகையை சம்பளம் எனும் மற்றும் ஊக்கத்தொகை என்ற பெயரில் பெறுகின்றனர்.  முதலில் சீன நிறுவனங்கள் ஷெல் நிறுவனங்களை தொடங்கியபிறகு தனிப்பட்ட முறையில் அலுவலகம் வைத்து செயல்படும் சிஎஸ்கள் மற்றும் ஆடிட்டர்களை அணுகுகின்றனர். பின்னர் அவர்கள் மூலம் தரவுகளை திருடும் செயலில் ஈடுபடுகின்றனர்.

இதையெல்லாம் உற்றுக்கவனித்து வந்த மத்திய அரசு இந்த ஜூன் மாதம் முதல்வாரத்தில் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்ட் ஆப் இந்தியாவுக்கு இதுகுறித்த விரிவான புகாரை அனுப்பியது. மேலும் ஷெல் நிறுவனங்கள் மற்றும் அதன் சிஎஸ்க்கள் ஆடிட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்த ATRஐ சமர்ப்பிக்கவும் அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது  உத்தரவிட்டுள்ளது.

அதேபோல ICSI எனப்படும் இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சீனா தனது ஷெல்நிறுவனங்களை உருவாக்க உதவும் ஆடிட்டர்கள் எண்ணிக்கை 400  என மத்திய கார்ப்பரேட் அமைச்சகம் அறிவித்துள்ளது. எல்லையில் சீன அத்துமீறலை தொடர்ந்து இந்திய மேல்மட்ட அதிகாரிகள் சீனாவின் செயலிகளை தடைசெய்வது இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். மேலும் ஆடிட்டர்கள் பலர் இந்த விவகாரத்தில் சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.