![ayothi, rameshwaram](https://www.tnnews24air.com/storage/gallery/pgXd6j4H3Pzf2g6LNoDVz0esp0HxS0IxGHR0lQQ5.jpg)
புராணங்கள் படியும் வரலாற்று படியும் அயோத்தியில் ராமரின் ஆட்சி நடந்ததை போற்றும் வகையிலும் ராமரை கொண்டாடும் வகையிலும் அயோத்தியில் ராமருக்கான கோவில் வேண்டும் என்பது இந்து மக்களின் முக்கிய கோரிக்கையாகவும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. இதற்காக பல போராட்டங்கள் மற்றும் வலிகள் நடந்துள்ளது, ஆனால் அவை அனைத்தும் தற்போது மறக்கடிக்கப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது அயோத்தி ராமர் கோவில்! இக்கோயில் 22 ஜனவரி 2024 அன்று கும்பாபிஷேகம் விழாவிற்குப் பிறகு திறக்கப்பட்டது.1528 மற்றும் 1529 க்கு இடையில் கட்டப்பட்ட பாபர் மஸ்ஜித் மசூதியின் முன்னாள் இடம் இது. பின் 1992 இல் தாக்கப்பட்டு இடிக்கப்படுவதற்கு முன்பு 1949 இல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் மசூதியில் வைக்கப்பட்டன. பின் 2019 ஆம் ஆண்டு, சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களுக்குக் கோயில் கட்டுவதற்காக வழங்குவதற்கான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியது , அதே சமயத்தில் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்குத் தன்னிப்பூரில் நிலம் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கை. பின்பு இந்த அறக்கட்டளை இறுதியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராஎன்ற பெயரில் உருவாக்கப்பட்டது . 5 பிப்ரவரி 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கோயிலைக் கட்டுவதற்கான திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக இந்தியாநாடாளுமன்றத்தில் அறிவித்தது, அதனை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 22 ஜனவரி 2024 அன்று கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு ராமரை பிரதிஷ்டை செய்தார். இதற்கிடையில் அயோத்தி கோயில் கட்ட ஆரம்பித்த நிலையில் நிறைய மக்கள் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு பாதயாத்திரையாக வந்தனர். மேலும் அவர்கள் ராமருக்கு கொடுக்க வேண்டிய பாதத்தினை கொண்டு வந்தனர். பிரதமர் மோடியும் அயோத்தியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி மேலும் பல ஆன்மீகப் பயணங்களில் ஈடுபட்டார். அதன் பின்தான் அயோத்தியில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அப்படிப்பட்ட ஒரு தொடர்பு தான் அயோத்திக்கும் ராமேஸ்வரத்திற்கு உள்ளது.
இந்த நிலையில் அயோத்தி கோவிலை பார்ப்பதற்கு தமிழகத்தில் இருந்து பலர் செல்கின்றனர். ஆனால் அயோத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ஒரு பெண்ணும் அவரது குடும்பமும்! தற்போது இவர் குறித்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பரவி வருகின்றது. மேலும் பலர் இப்பெண் செய்வதை பாராட்டியும் வருகின்றர்.அதாவது உத்திரபிரதேசம் மாநிலம், அயோத்தி நகரைச் சேர்ந்தவர் சிப்ரா பதக் என்ற பெண்மணி. கடந்த சில மாதங்களுக்கு அயோத்தியில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்ட அவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து இதுவரை 4000 கி.மீ. தூரம் நடந்து இன்று மதுரை வந்தடைந்தனர்.மேலும் இவர்கள் இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் தண்ணீரின் தேவையை வலியுறுத்தி வரும்காலங்களில் நீரை நாம் சிக்கனமாகவும் தேவையில்லாமலும் பயன்படுத்தினால் தண்ணீருக்காக உலகம் மூன்றாம் உலகப்போரை சந்திக்கவேண்டியிருக்கும் என்று கூறினார். இதைதொடர்ந்து மேலும் தனது பாதயாத்திரையின் நோக்கமே நீர் நிலம் ஆகாயம் காற்று மற்றும் நெருப்பு போன்ற பஞ்சபூதங்களை உலக சமுதாயம் போற்றிப்பாதுகாப்பதே எனகூறும் சிப்ரா பதக் தனது பாதயாத்திரைக்கு ராம் ஜானகி யாத்ரா என பெயர் சூட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இவரது செயலை பாராட்டி ராமேஸ்வரம் செல்லும் முன்பு மதுரை கோச்சடையிலுள்ள தனியார் பள்ளி சிப்ராவை அழைத்து மரக்கன்றை நடவைத்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இவர் செய்யும் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்கின்றது.