சென்னையில் புயலின் காரணமாக பெய்த கனமழையால் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது, சாலையோரத்தில் வாழும் மக்களில் இருந்து பெரும் பணக்காரர்கள் வரை தங்கள் வீடுகளை நீர் சூழ்ந்துள்ளது! எங்களுக்கு அடிப்படை உதவிகள் கிடைக்கவில்லை! மின்சாரம் இல்லை! மொபைலில் சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என பலரும் தங்களுக்கு உதவிகள் வேண்டும் என கடந்த இரு தினங்களாக சமூக வலைதளத்தில் பதிவிட்டும், பிறர் மூலமாக உதவி கோரியும் வருகின்றனர். சென்னையில் பிரதான ஏரியாவான கோடம்பாக்கம், தி நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், பாரிஸ் போன்ற இடங்களில் எல்லாம் உள்ள தண்ணீரை வடிய வைப்பதற்கே இந்த இரண்டு நாட்கள் அரசுக்கு சரியாக போய்விட்டது.
இன்னும் கூறப்போனால் தென் சென்னையின் முக்கிய பகுதியான பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், முடிச்சூர், தாம்பரம் இந்த பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி போன்ற பகுதிகளில் எல்லாம் இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அங்குள்ள மக்கள் மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும், பலர் உதவி கோரியும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விஷ்ணு விஷால் சிக்கியதும் அதன் பின்னர் நடந்த சம்பவங்களும் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிறது. நடிகர் விஷ்ணு விஷால் திடீரென தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் 'எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது! காரப்பாக்கத்தில் மோசமான அளவு தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது, எனக்கு உதவி தேவை! மின்சாரமோ, மொபைல் போன் சிக்னல் எதுவுமே இல்லை, மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எனக்கு சிக்னல் கிடைக்கிறது அதை வைத்துக்கொண்டு நான் உதவி கோருகிறேன் ஹெல்ப் மீ' என கேட்டிருந்தார்.
உடனே சமூக வலைதளங்களில் இது வேகமாக பரவியதை முன்னிட்டு விஷ்ணு விஷாலின் வீட்டிற்கு தீயணைப்பு அவசரகால படகு எடுத்துக்கொண்டு சென்றனர், அப்பொழுது விஷ்ணு விஷால் வீட்டிற்கு சென்ற பொழுது அங்கு நடிகர் அமீர்கான் இருப்பதை கண்டு அனைவருக்கும் ஆச்சர்யம்! எப்படி அமீர்கான் சென்னையில் வந்து அதுவும் விஷ்ணு விஷால் வீட்டில் இருக்கிறார்? இப்படி வெள்ளத்தில் சிக்கிவிட்டார் என அதிர்ந்து உடனடியாக அங்கிருந்த அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் மற்றும் அவரிடம் குடும்பத்தாரை மீட்டு காப்பகத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் மீட்டுக் கொண்டு வந்ததோடு அவர்கள் பணி முடிந்து விட்டதாக நினைக்கும் பொழுது அடுத்தபடியாக என்ன தேவை? அவர்களுக்கு என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் தான் 'நடிகர் அஜித் எங்களுக்கு உதவினார். பொதுவான நண்பர் ஒருவர் மூலமாக' என விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார். என்னடா இது 'அமீர்கான் சென்னையில் சிக்கி இருக்கிறார்! அஜித் உதயிருக்கிறார் என்னதான் நடக்கிறது?' என பின்னணியை விசாரிக்கும்போது பல விஷயங்கள் கிடைத்தன. விஷ்ணு விஷாலும் அமீர் கானும் கடந்த சில மாதங்களாகவே ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் ஒன்றிற்காக இணைந்து வேலை செய்வது வருவதாகவும் அதன் காரணமாகத்தான் அமீர்கான் விஷ்ணு விஷால் வீட்டிற்கு வந்துள்ளார் எனவும் தெரிகிறது. மழை அதிகமான காரணத்தினால் விமானங்கள் கேன்சலான காரணத்தினால் அமீர்கானால் வெளியில் செல்லமுடியவில்லை! மழை முடிந்ததும் செல்லலாம் என இருந்த பொழுது மழை நீர் விஷ்ணு விஷாலின் வீட்டை சூழ்ந்து விட்டது, அதனால் தான் உடனடியாக விஷ்ணு விஷால் எங்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக அங்கு அவரை காப்பாற்றியுள்ளனர், இந்த செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்ட அஜித் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் அமீர்கான் இப்படி சென்னையில் வந்து சிக்கிவிட்டாரே! இது நமக்கு பெரிதும் அவமானம் இல்லையா உடனே நாம் உதவ வேண்டும் என உடனடியாக அஜித்தின் நண்பரை அழைத்து என்ன செய்வீர்களோ தெரியாது அமீர்கானுக்கு என்ன உதவி வேண்டுமா எல்லாவற்றையும் செய்யுங்கள் எனக் கூறி உத்தரவிட்டார். உத்தரவிட்டது மட்டுமல்லாமல் அமீர் கானையும் விஷ்ணு விஷாலின் எங்கு தங்க வைத்திருந்தார்களோ அங்கு சென்று நேரில் பார்த்துள்ளார் உங்களுக்கு என்ன வசதிகள் வேண்டும் என்ன தேவை உங்களுக்கு என்ன சரியாக கிடைக்கிறதா எனக் கூறி அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் எனக்கூறியும் வந்துள்ளார் அஜித்.
இந்த புகைப்படத்தை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சினிமா விழாக்களுக்கு வரமாட்டேன் என்கிறார்! திருமண நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன்! என்கிறார் என அஜித்தை குறை கூறியவர்கள் இருக்கும் சமயத்தில் இப்படி வட இந்தியாவில் அதுவும் இந்தியாவின் பிரதான நடிகர் ஒருவர் சென்னையில் சிக்கிய விஷயம் இருந்து வேறு எந்த நடிகரும் வராத சமயத்தில் உடனடியாக அஜித் வந்து இறங்கி அந்த நடிகருக்கு ராஜ உபசாரம் செய்துவிட்டு சென்றது குறித்து தற்பொழுது இணையத்தில் அஜித்துக்கு பாசிட்டிவாக கமெண்ட்டுகள் பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.