தற்பொழுது சென்னையில் பெய்து வரும் கன மழை தான் தலைநகரையே ஆட்டம் காண வைத்து வருகிறது, வங்க கடலில் உருவாகியுள்ள நிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி தற்பொழுது கடந்த ஆந்திராவை நோக்கி சென்று கரையை கடந்துவிட்டது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை சென்னையில் பெய்துள்ளது, தொடர் மழையால் சென்னையின் புறநகர் மற்றும் சென்னையில் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. எங்கும் மின்சாரம் இல்லை! உணவகங்கள் இல்லை! கடைகள் இல்லை! மக்கள் இறங்கி தெருவில் நடமாட முடியவில்லை! ஆங்காங்கே அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து பதுங்கி இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது, குறிப்பாக சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தரைவழிப் பாலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன, சென்னையின் பல இடங்களில் கழிவுநீரும், மழை நேரம் சேர்ந்து வீடுகளுக்குள் பொங்கிய காரணத்தினால் மக்களால் கழிவறையை கூட உபயோகப்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்பொழுது ஆங்காங்கே வெள்ள நிவாரண படைகள் இறங்கி மக்களை மீட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர், அவர்கள் வேறு இறங்கி மக்கள் ஏங்கே மாட்டியிருக்கிறார்களோ ஆங்காங்கே மக்களை மீட்டு வருகின்றனர்.
இப்படி சென்னையே ஒரு வாரத்திற்கு முன்பு கொண்டாட்டமாக இருந்த சென்னை தற்பொழுது மழைவெள்ளம் காரணமாக திண்டாட்டத்தில் இருந்து வருகிறது!
இந்த நிலையில் அறிவாலயத்தில் இருந்து சென்னை மேயர் பிரியா அவர்களுக்கு கோபத்துடன் மெசேஜ் ஒன்று பறந்துள்ளதாம், என்ன நடந்தாலும் சரி! எது எப்படி இருந்தாலும் சரி! சென்னையில் இருக்கும் மழை நீர் வடியாமல் நீங்க உங்கள் வீட்டுக்கே செல்லக்கூடாது! பறந்து பறந்து வேலை செய்ய வேண்டும்! அலுவலகம், அலுவலகத்தை விட்டால் களப்பணி இது ரெண்டும் தான் உங்களுக்கு வேலை நீங்கள் குடும்பம் மற்றும் எதையும் நினைக்க கூடாது!
இரண்டு நாட்களில் நாம் மூன்று நாட்கள் ஆனாலும் மழை நீர் வடிந்ததற்குப் பிறகுதான் நீங்கள் இங்கிருந்து நகரம் வேண்டுமென உத்தரவு பறந்துள்ளதாம். இது மட்டுமல்லாமல் அமைச்சர்கள் மா.சுபிரமணியன், சேகர் பாபு, டிஆர்பி ராஜா ஆகியோருக்கும் வேறு அறிவாலயத்திலிருந்து உத்தரவு பறந்துள்ளதாம் என்ன செய்வீர்களோ தெரியாது! சென்னையை நீங்கள் பிரித்துக் கொள்ள வேண்டும்! ஆங்காங்கே மக்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் தேர்தல் வருகிறது மூன்று மாநில தேர்தல்களின் முடிவுகள் என்ன ஆயிற்று பார்த்தீர்களா! இன்று தெரிகிறதா நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்! இந்த முறை கோட்டை விட்டால் அவ்வளவுதான் என்ற எச்சரிக்கையுடன் வேறு மெசேஜ் பறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை எல்லாவற்றிக்கும் காரணம் என்ன என விசாரித்த பொழுது இன்னும் ஐந்து மாதத்தில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் சென்னை மக்கள் தற்பொழுது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள், திமுக சென்னை என்பது திமுகவின் கோட்டை என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த முறை தேர்தல் வைத்தால் நிச்சயம் பெரிய அளவில் அடிவாங்கும் என கள நிலவரங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளது, அப்படி இருக்கும் பொழுது இந்த மழை வேறு திமுகவிற்கு மேலும் பின்னடைவு ஏற்படுத்துமாறு செய்துவிட்டது இதன் காரணமாகத்தான் மேயர் பிரியா மற்றும் அமைச்சர்களுக்கு அந்த உத்தரவு பறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் மேயர் பிரியா ரிப்பன் பில்டிங் மற்றும் களப்பணியில் இருந்தவாறு செய்திகளை கொடுத்து வருகிறார் என தகவல்கள் கிடைத்துள்ளது.