24 special

ஒளிந்து கொண்ட சித்தார்த்... தேடும் இணைய வாசிகள்...

siddarth, social media
siddarth, social media

2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இதற்கு முன்பாக 100 ஆண்டுகள் வரை சென்னை கண்டிராத வெள்ளப்பெருக்கு என்று கூறப்பட்டது. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மழை நிவாரண நடவடிக்கைகள் குறித்து அன்றைய எதிர்க்கட்சிகள் பெருமளவில் விமர்சனம் செய்தது அவர்களுக்கு ஆதரவாக பல நடிகை நடிகர்கள் ஆளும் அதிமுக அரசு குறித்து விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். ஆனால் மக்களின் நிலையோ முழங்கால் அளவு தண்ணீர்! இடுப்பளவு தண்ணீர்! மழையின் மேகம் அதிகரிக்க அதிகரிக்க கழுத்தளவு தண்ணீருக்குள் சிக்கி திண்டாடினர்.


சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் சமயத்தில் இருந்து தான் சமூக வலைதளங்களின் செயலாக்கம் அதிகரித்தது சமூக வலைதளம் மூலம் உதவி தேவைப்படுகிறது என்ற தகவலை தெரிவிக்கப்பட்டது. இந்த பதிவுகள் மூலம் உணவு உடை உறைவிடம் என அனைத்தும் கொடுக்கப்பட்டது அதற்கான நடவடிக்கைகளை அன்றைய அரசு தீவிரமாக எடுத்து வந்தது. சென்னை முழுவதையும் அப்பகுதி மக்களையும் காப்பதற்காக அன்றைய முதல்வரால் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவை எதிர்க்கட்சி கடுமையாக விமர்சனம் செய்தது. பல தரப்பில் இருந்து உதவிகள் மக்களுக்கு சென்று அடைந்தும் ஆளும் அரசு சென்னை மக்களை பரிதவிக்க விட்டது மக்களை காப்பாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அதிமுகவிற்கு  எதிரான பதிவுகளை நடிகர் சித்தார்த் பதிவிட்டு இருந்தார். 

இதுவரை இல்லாமல் முதல்முறையாக எனது வாழ்க்கையும் எனது வீடும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் மக்களை காப்பாற்றும் பணியில் நான் இறங்கி உள்ளேன் என நடிகர் சித்தார்த் பதிவிட்ட பதிவுகள் வைரலானது. இவர் மட்டுமல்லாமல் இன்னும் சில நடிகை நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்ததோடு நிவாரண பணிகளிலும் ஈடுபட்டனர். மேலும் அப்படி நிவாரண பணிகளில் ஈடுபடுவோர் அதிமுக அரசை குறித்து விமர்சனம் செய்யாமலும் அரசை பற்றி தவறான கருத்துக்களையும் பதிவிட மறக்கவில்லை. மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குகளை கொண்டுள்ள நடிகை நடிகர்களை இப்படி கூறியதும் அவர்களுக்கு அவர்களின் கருத்திற்கு கிடைத்த ஆதரவு பெருமளவில் பெருகியது.

ஆனால் அதற்குப் பிறகு திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் சந்தித்து விடாத பல இன்னல்களை மக்கள் சந்தித்தனர் என கூறப்பட்டது, திராவிட மாடல் என்ற ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வருடத்திலேயே மக்கள் அரசின் மீது பெரும் அதிருப்திகளை கொண்டிருந்தனர். திமுகவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை மக்களை பெரும் தரக்குறைவாக நடத்தியதும் மக்களின் கோரிக்கைகளை அவமதித்ததும் பல,  செய்திகளில் வெளியானது. இருப்பினும் அவை ஒன்றிற்கு கூட தமிழக திரை உலக தரப்பிலிருந்து நடிகை நடிகர்கள் ஒரு கருத்தையும் பதிவிடவில்லை குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரளா தண்ணீர் தருவதை மறுத்த பொழுதும் அன்றைய போராளிகளான சித்தார்த், சூர்யா, சத்யராஜ், ஜோதிகா, ஆர் ஜே பாலாஜி போன்று திமுக ஆட்சி காலத்தில் இருந்த இடம் தெரியாமலே அமைதியாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது.

தற்பொழுது 2015 ஆம் ஆண்டை விட அதிக வெள்ள அபாயத்தையும் கனமழையாலும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து இதுவரை கண்டிராத பெரும் அவதிகளை மக்கள் கண்டு வருகின்ற நிலையிலும் எந்த ஒரு நிவாரண நடவடிக்கைகளிலும் அன்றைய போராளிகள் இறங்காமல் உள்ளனர். அதுமட்டுமின்றி தமிழக முதல்வரே 2015 ஆம் ஆண்டு விட தற்பொழுது சென்னையில் பொலிந்த மழையின் அளவு அதிகம் எனக் கூறும் வேலையில், சித்தார்த் எங்கே போன ஆட்சியில் உதவி செய்தாரே இந்த ஆட்சியில் ஏன் அவர் உதவி செய்ய வரவில்லை! எங்கே அவரை காணம் என சமூக வலைதளத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.