24 special

பெரும் குழப்பத்தில் காங்கிரஸ் ...! கூட்டணி இருக்கா இல்லையா...?

Ragul ganthi , mkstalin
Ragul ganthi , mkstalin

ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி தலைவருக்கு G20 மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் வைத்து கொண்டு இருக்க மறு புறம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நேற்றைய G20 விருந்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.


அமெரிக்க அதிபருக்கு கை கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் தனது x பக்கத்தில் பதிவிட தற்போது பெரும் சர்ச்சை வெடித்து இருக்கிறது.

டெல்லியில் ஜி20 அமைப்பின் 18வது உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முருமு இரவு உணவு விருந்து அளித்தார்.இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அதன்படி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை ஏற்று,  நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரின் விருந்தில் பங்கேற்றார் அதன் பிறகு இன்று காலை சென்னை திரும்பினார். இந்த நிலையில், நேற்றைய இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான தனது டிவிட்டர் பதிவில், ”குடியரசு தலைவர்  அளித்த ஜி20 மாநாட்டின் இரவு விருந்தில் காவேரி மேசையில் இருந்து பங்கேற்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் கைகுலுக்கும் காட்சியும், அவர்களுக்கு பக்கத்தில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது ஒருபுறம் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு இல்லை என கடும்  எதிர்ப்பை காங்கிரஸ் பதிவு செய்து வரும் வேலையில் கூட்டணி கட்சியான திமுக அதனை பொருட்படுத்தாமல் எப்படி விருந்தில் பங்கு கொள்ளலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது, இது அனைத்தையும் தாண்டி உதயநிதி பேசிய சனாதனம் குறித்த சர்ச்சை கருத்து வட இந்தியா முழுமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பெரும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது இப்படி திமுகவால் நாங்கள் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம் ஆனால் திமுக சந்தோசமாக விருந்தில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

திமுக என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என தெரியவில்லை என புலம்பி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். மொத்தத்தில் திமுக மாறி மாறி துண்டு போட்டு வருவதால் இண்டியா கூட்டணி கடும் அச்சத்தில் இருக்கிறதாம்.