24 special

சொந்தக் கட்சிக் கவுன்சிலர்களே இப்படி பண்ணலாமா...? வேலூர் மேயரை கதறவிட்ட திமுகவினர்....!

Sujatha,mkstalin
Sujatha,mkstalin

வேலூர் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு மாநகராட்சி கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது கூட்டம் கூடுவதற்கு முன்னரே ஆளும் கட்சி கவுன்சிலர்கள் இடையே கடும் கோபம் ஏற்பட்டது. ஏனென்றால் கூட்டத்தை கால தாமதமாக கூட்டியதால் வேலூர் மேயர்சுஜாதா மீது கவுன்சிலர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் இருந்தனர். 


இதனைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியவுடன் ஆளும் கட்சி கவுன்சிலர்கள் வரிசையாக அவர்களது குறைகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தனர் அதாவது எங்கள் வார்டில் எதுவுமே நடைபெறவில்லை என கோபத்துடன் எடுத்துரைக்க மாமன்ற கூட்டம் பரபரப்புக்கு உள்ளாகியது. மேலும் வேலூர் எம் எல் ஏ கார்த்திகேயன் மேயர் அருகில் அமர்ந்து கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போது துணை மேயர் சுனில் குமார் கூட்டத்திலிருந்து கிளம்பி சென்றுவிட்டார்

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ஆளும் கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய மேயர் சுஜாதா அனைவரிடமும் ஆக்ரோஷமாக பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலர்களும் அவர்களது வார்டில் உள்ள குறைகளை வரிசையாக எடுத்துரைத்தனர் அந்த வகையில் திமுக கவுன்சிலரான புஷ்பலதா மண்டல குழு தலைவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை ஏனென்றால் ப்ளீச்சிங் பவுடரை கொடுத்து தெருக்களில் போட சொன்னால் மட்டும் போதுமா தெருக்களில் உள்ள நாய் தொல்லைகளை ஒழிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேள்வியை எழுப்பினார். 

இதனால் கவுன்சிலர்களின் குமுரல்களுக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் வெறும் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தினார் மேயர் சுஜாதா என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தொடர்ந்து பேசிய வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை வரிசைகட்டி அடுக்கினர் அதில் முக்கியமாக காகிதைப்பட்டறை தெருவில் தெருக்கள் மிக குறுகிய பாதையில் இருப்பதாகவும் அதை விரிவுபடுத்த கோரியும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் அதற்கான தனியாக வாகனம் ஒன்றை சுகாதாரத் துறையிடம் கேட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகி உள்ளது ஆனால் இதுவரை எங்களுக்கு தரவில்லை காரணம் டிரைவர் இல்லை டீசல் போட முடியாது போன்ற பல காரணங்களால் நிறுத்தி வைத்துள்ளனர் இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று தனது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

மேலும் சில கவுன்சிலர்கள் பேசியபோது குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடம் இல்லை என்றும் தண்ணீர் வசதி இல்லை என்றும் சாலைகள் சீர் கெட்டு கிடக்கின்றன என்றும் மேலும் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருக்கின்றன இதையெல்லாம் சரி செய்யாவிட்டால் அடுத்த மாமன்ற கூட்டத்தில் ஆயிரம் பேரை கூட்டி வந்து கூட்டத்தை நடத்தி விடாமல் செய்து விடுவோம் என்று மேயரை மிரட்டியதுடன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது இதனால் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் குமுறல்களுக்கும் பதில் சொல்ல முடியாத மேயர் சுஜாதா மற்றும் ஆணையர் கோபத்தை வெளிப்படுத்தியதால் செய்தியாளர்கள் கூட  வெளியில் சென்று உட்கார்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இப்படியாக இந்த வேலூர் மாமன்ற கூட்டம் ஒரு கலவரத்துடன் தொடங்கி கலவரத்துடன் முடிவடைந்தது. 

கட்சியில் இருக்கும் ஒற்றுமை இல்லா தன்மையை வெளிப்படையாக காட்டுகிறது, இப்படி சொந்த கட்சி கவுன்சிலர்களே நேயரிடம் மாமன்ற பொதுக்கூட்டத்தில் அவமானப்படுத்தி பேசியதால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளை திமுக கைப்பற்றியதால் திமுகவை சேர்ந்த சுஜாதா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது..