பல மதப் போராட்டங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் 2019 ஆண்டில், வழக்கில் சிக்கியுள்ள நிலத்தில் ராமருக்கான கோவில் கட்ட அனுமதி வழங்கியதை அடுத்து ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்ட ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு 2000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் தேதி இதன் கும்பாபிஷேக விழாவும் கோலாகலமாக நடைபெற்றது அதில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக அயோத்தி ராமர் கோவிலில் அறக்கட்டளை சார்பில் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்து தீபாராதனையும் மேற்கொண்டு ஒட்டு மொத்த நாட்டு மக்களின் பிரதிநிதியாக கிட்டத்தட்ட 4 மணி நேரம். கும்பாபிஷேக விழாவில் இருந்து விழாவை சிறப்பித்து சென்றார்.
அயோத்தியில் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை உலகின் மூளை முடுக்கில் வசித்து வரும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி வருகின்றனர். இதற்காக அவர்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற வகையில் மத்திய அரசு கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தது ஆனால் தமிழக அரசு இதனை ஏற்காமல் தமிழகத்தில் மட்டும் இந்த கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாமல் இருந்ததும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு தமிழக பாஜக மற்றும் மத்திய அமைச்சர்கள் தரப்பிலும் கண்டனங்கள் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ்கள் பெருமளவில் வழங்கப்படாமல் இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளை தேர்ந்த அனைவருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டும் அவர்கள் இதில் கலந்து கொள்ளாமல் இருந்தது விமர்சனங்களை பெற்ற நிலையில் எதிர்க்கட்சி தரப்பினர் மற்றும் இடது சாரியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அயோத்தி ராமர் கோவில் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இதில் திமுகவை சேர்ந்து ராஜீவ் காந்தி, இது தான் இராம இராஜ்ஜுயம்!! திருமணம் செய்யாத மோகன்பகவத், யோகி ஆதித்தியநாத். திருமணம் செய்து மனைவியை கைவிட்ட மோடி மூன்று பேரும் சேர்ந்து திறப்பு விழா நடத்தி திறக்கப்பட்டுள்ளது ராமர் கோவில்! அமிதாபச்சனை அழைத்தவர்கள் நாட்டின் குடியரசு தலைவரை அழைக்கவில்லை! எடப்பாடியையும் ரஜினியையும் அழைத்தவர்கள் நிர்மலா சீதாராமனை அழைக்கவில்லை! சாமியார்களை அழைத்தவர்கள் அழைப்பிதலில் பெயர் இருந்தும் உத்திரபிரதேச ஆளுநர் அனந்திபேனனை அனுமதிக்கவிலலை! ஆக மொத்ததில் இராம ராஜ்ஜுயத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள்தான். அதனால்தான் தமிழ்நாடு இராமன்சாமி பின் நிற்காமல் ‘இராமசாமி’பின் நிற்கிறது! என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் விளையாட்டுப் பிரிவை சேர்ந்த அலிஷா அப்துல்லா அயோத்தி ராமர் கும்பாபிஷேக விழாவில் உத்தரபிரதேச ஆளுநர் கலந்துகொண்டு கருவறைக்குள் வரைக்கும் வந்து வழிபட்டார் என்பதற்கு ஆதாரமான புகைப்படத்தையும் குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டு கருவறைக்குள் நிற்பது புல்புடுங்கி கருணாநிதி இல்லை.உத்திரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்கள்..திமுக போடும் எலும்பு துண்டுக்கு விசுவாசமாக இருக்கும் கோபாலபுரத்து நண்பர் நீங்கள். மீண்டும் சொல்கிறேன் ஜெய் ஸ்ரீ ராம் என குறிப்பிட்டுள்ளார். இதனால் ராஜீவ் காந்தி மறு பேச்சு பேசாமல் வாயடைத்து போய்விட்டார்! மேலும் இது இணையத்தில் வைரலாகி வருகிறது.