சனாதன தர்மம் கடைபிடிப்பது தான் கடந்த சில காலமாகவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது, இந்து மத சார்ந்த வழிபாடுகளும்! இந்துமதம் சார்ந்த பண்டிகை முறைகளும் தான் சனாதனம் என வலதுசாரிகள் கூறி வந்தாலும் சனாதனம் என்பது ஆரிய கோட்பாடு, சனாதனம் என்பது வருணாசிரமம் போன்ற விஷயங்களை இடதுசாரிகள் குறிப்பாக திமுக கூட்டணியின் தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் சனாதனத்தை ஒழிப்பேன் என அமைச்சர் உதயநிதி கூறியது வேற பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது, இந்த நிலையில் தமிழ் திரையுலகத்தில் இருந்து வேறு சனாதனத்தை ஒழிப்பது குறித்து உதயநிதி பேசியதற்கு எந்த எதிர்ப்புகளும் எந்த ஒரு கேள்விகளும் வராமல் இருந்தது இந்து சமுதாய மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. உதயநிதி பேசினார் அதற்க்கு வேறு யாராவது திரையுலகில் இருந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம், ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியிருக்கலாம் ஏன் திரையுலகில் இருப்பவர்கள் இதுபோன்று சனாதன விவகாரத்தில் அமைதியாக இருக்கிறார்கள்? படம் எடுக்க வேண்டும் என்றால் பூஜை போடுகிறார்கள், படத்தின் படப்பிடிப்பை பூஜை போட்டு சனாதன முறைப்படி துவங்குகிறார்கள் ஆனால் சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என கூறும் பொழுது ஏன் எதுவும் பேசவில்லை என்று தமிழ் திரையுலாக சேர்ந்தவர்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருந்து வந்தார்கள்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகத்தில் இருந்து சனாதனத்தை போற்றுவதற்காக ஒரு சிலர் அவ்வப்போது குரல் எழுப்பி வருவது குறித்து இந்த வரவேற்பு இருந்து வந்த நிலையில் தற்பொழுது நடிகர் ரஞ்சித் வெளியிட்ட வீடியோ ஒன்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ரஞ்சித் வேல் வழிபாடு என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் இத்தனை ஆண்டுகளாக வரை புத்தாண்டு கொண்டாட்டத்தை எப்படி எல்லாமோ கொண்டாடியிருப்போம்! குடும்பத்துடன் கொண்டாடியிருப்போம்! வேலை செய்யும் இடத்தில் ஷூட்டிங்கில் கொண்டாடியிருப்போம்! நண்பர்களுடன் கொண்டாடியிருப்போம் ஆனால் இந்த புத்தாண்டை நான் சனாதன முறைப்படி கொண்டாட இருக்கிறேன். சென்னி மலையிலிருந்து பழனி மலைக்கு செல்லும் வேல் யாத்திரையில் இந்த புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்திற்காகவும் உலக மக்களின் நன்மைக்காக வேண்டிக்கொண்டு நான் நடக்கவிருக்கிறேன் எனக் கூறி அவர் வீடியோ வெளியிட்டது தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.
சனாதன தர்மம் பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்ளாத நிலையில்! சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசும் பொழுது அதனை கேள்வி கேட்க யாரும் இல்லாத நிலையில்! இப்படி சனாதன தர்மத்திற்காக ஆதரவு தெரிவித்துவிட்டு நான் இப்படித்தான் இருக்கப் போகிறேன் என ரஞ்சித் வீடியோ வெளியிட்டு இருப்பது பலருக்கு ஆதரவாகவும் மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதும் குறிப்பிடத்தக்கது.தமிழ் திரையுலகத்தில் இருந்து உதயநிதி சனாதன தர்மத்தின் எதிர்ப்பு பேச்சு குறித்து பேசாமல் இருப்பதும், இந்து மதம் குறித்தும் இந்து மதத்தை இழிவு படுத்துவது குறித்தும் பலர் பேசும்போது அதற்க்கு பதிலளிக்காமல் இருப்பதும், சனாதன வழிபாட்டு முறைகளை அவமதித்து திரைப்படம் எடுக்கும் அவலம் அதிகரித்துள்ள நிலையில் இப்படி சமாதான தர்மத்திற்காக ஒருவர் பேச இருக்கிறார் அதுவும் வேல் எடுத்துக் கொண்டு யாத்திரை செல்ல இருக்கிறார் என ரஞ்சித்துக்கு ஆதரவாக கமெண்ட்டுகள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியை எதிர்த்து ரஞ்சித் பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது.