தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைடுலகில் அறிமுகமாகி அதனை தொடர்ந்து காக்கா முட்டை திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதோடு அவரது நடிப்பு வளரது பாராட்டையும் பெற்றது இதனை அடுத்து வட சென்னை, நம்ம வீட்டு பிள்ளை, கனா போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட இவரது நடிப்பை வெளியான ஃபர்கானா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இன்னும் பல படங்களை தன் கையில் வைத்துள்ளார். அதாவது கருப்பர் நகரம், மோகன்தாஸ் மற்றும் தீயவர் கொலைகள் நடுங்க என்ற திரைப்படங்களையும் சில வெப் சீரிஸ்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
பர்ஹானா திரைப்படத்தின் மூலம் கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தன் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு சிறிது காலத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் திரைப்படம் அந்த அளவிற்கு ஐஸ்வர்யா ராஜேஷிற்கு எதிர்ப்பை பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து தமிழகத்தின் தலைநகர் மற்றும் தென் பகுதிகள் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் சென்னையில் ஒரு தங்கம் மற்றும் வைர நகைக்கடையை திறந்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிகையாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் முறையாக பதிலளிக்காததும் விமர்சனங்களை பெற்றது. இதன் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை ஹட்டன் டன்பார் மைதானத்தில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் இவரது நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படத்தின் கூட மேல கூட வச்சு பாடலை பாடியதோடு அப்பகுதியின் அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டமான் குறித்து மிக பாராட்டி பேசினார்.
அதாவது இலங்கையில் இருந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொங்கல் விழாவிற்கு அழைத்த பொழுது சரி ஒரு வயசானவர்தான் இருப்பார் என்று நினைத்தேன் ஆனால் பார்த்தால் குட்டியா அழகா ஒரு இளம் வயது இளைஞர் அமைச்சராக இருக்கிறார் இவ்வளவு இளமையிலே அமைச்சராக இருப்பது மிகப்பெரிய சாதனை தான்! மேலும் தான் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தின் 10க்கு 10 வீட்டில் இருந்து நடித்த பொழுது தான் எனக்கு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் துயரம் எனக்கு புரிந்தது ஆனால் இங்கு அதுபோன்ற துயரத்தை அப்பகுதி மக்கள் சந்திக்கக் கூடாது என்பதற்காக அமைச்சர் ஜீவன் செய்த வேலைகள் அனைத்தும் பாராட்டிற்கு உரியது என்றும் இது போன்ற அமைச்சர் எங்கள் பகுதியில் இல்லை என்பது பொறாமையாக உள்ளது என்றும் கூறினார். மேலும், எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் குழந்தை குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று ஆசைதான் என்று தன் தனிப்பட்ட ஆசையும் அம்மேடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்து தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. நாடு விட்டு நாடு சென்று இலங்கையின் அமைச்சரை அழகானவர் என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது இணையத்தில் தீயாக உலா வருகிறது...