நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. வரும் நாட்களில் தேர்தல் தொடர்பான தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் தலைமையில் தேர்தலை சந்திக்கவுள்ளது. இதில் திமுகவுக்கு போட்டியாக பாஜக கூட்டணியை வலுப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக கட்சி கூட்டணி இல்லாமல் தனிமையில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு பாஜக அமமுக கட்சி டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுக கூட்டணியில் கடந்த முறை தொடர்ந்த அதே கூட்டணி கட்சிகள் தற்பொழுதும் நீடித்து வருகிறது. அதிமுகவில் பெரியதாக இதுவரை கூட்டணி அமையவில்லை. புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ பாட்னரா இரண்டு கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளது. தேமுதிக கட்சியுடன் இழுபறி நடந்து வருவதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் அதிமுக 40-லும் தனித்து போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது.
பாஜக தங்களின் கூட்டணியை பலமாக்க பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அறிவித்தார். சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று நள்ளிரவு மத்திய அமைச்சர் வி.கே சிங் அவர்கள் தலைமையில் தினகரன் மற்றும் ஒபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசுவார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு இரண்டு மணிநேரம் வரை நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு டிடிவி தினகரன் சிரித்த முகத்தோடு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன் கூறியதாவது: அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் என்றும் பாஜக 4 தொகுதிகள் கொடுக்க முன்வந்துள்ளது என்றும் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த தொகுதிகளின் லிஸ்ட்டை தான் அண்ணாமலையிடம் வழங்கி உள்ளோம். மீண்டும் பிரதமர் மூன்றாவது முறையாக பொறுப்பேற்று தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை வழங்குவார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை முடித்த நிலையில், வெளியே வந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது, 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை மிக சுமுகமாக முடிந்தது பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. 6 தொகுதி கேட்ட நிலையில் பாஜக 4 தொகுதி ஒதுக்க முன்வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் தங்கள் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளோம் என்று தெரிவித்தது எடப்பாடி பழனிசாமி தர்பாருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இணையத்தால் தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஐ பாஜக கூட்டணிக்குள் ஏற்று கொண்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் பாஜக தலைமையிடம் கூறி இரட்டை இலையை தனது வசமாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் ஆணையரும் கடந்த வாரம் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுக்குமோ அதன் படி செயல்படுவோம் என்று கூறினார். இந்நிலையில் தொடர்ந்து இரட்டை இலை தனது சாதகமாக வரும் என்று ஓபிஎஸ் கூறி வரும் நிலையில் தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையைவிட்டு போனாலும் போகலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாமக இனையும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்று கூறிய நிலையில், தனது பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டு பாமக பாஜக பக்கம் சென்றது. அங்கு 7 தொகுதி கேட்டு மற்றும் மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று கேட்டுள்ளதாம் பாமக. இடர்க்கு பாஜக தரப்பு ஒரு எம்பி வெற்றி பெற்றால் அதனை யோசிக்கலாம் என்று கூறியதாம். இதனால் பாமக பாஜகவுடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எந்த நேரத்திலும் இணையும் எண்டுறம் தகவல் வந்துள்ளது. இதனால் அதிமுக தற்போது வலுவிழந்து இந்த தேர்தலை சந்திக்க போகிறது என்று அரசியல் விமர்சகளால் கூறப்படுகிறது.