Technology

என்னது 2014 ல் 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் MH370 விபத்து ஆகவில்லையா???? பரபரக்கும் தகவல்!!!

malaysia areoplain
malaysia areoplain

விமானம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது!! பெரியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் விமானத்தில் போக வேண்டும் என்றால் குஷியாக கிளம்பி விடுவார். பணம் வைத்திருப்பவர்கள் நினைத்த போதெல்லாம் நினைத்த இடங்களுக்கு விமானத்தில் சென்று வருகின்றனர். மேலும் சிலரது வாழ்க்கையில் விமானத்தில் செல்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் உள்ளது. ஆனால் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அப்படி இல்லை. இன்றும் கூட பல நடுத்தர குடும்பங்களில் இருக்கும் எல்லாரும் விமானத்தில் போக வேண்டும் என்பதை தங்களின் கனவாகவே கொண்டுள்ளனர். சில பெற்றோர்கள் தங்களால் போக முடியவில்லை என்றாலும் தங்கள் பிள்ளைகள் போக வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இன்றைய காலங்களில் விமானத்தில் போவது என்பதை நினைத்தாலே கொஞ்சம் பயமாகவும் தான் உள்ளது. ஏனெனில் திடீரென்று விமானங்கள் காணாமல் போய்விடுகிறது அல்லது விபத்துக்குள்ளாகிறது. இதுபோலத்தான் 2014 ஆம் ஆண்டு தொலைந்து போன விமானம் இன்றும் கிடைக்கவில்லை!! அது பற்றிய தகவல்கள் இதோ!!


கடந்த 2014 ஆம் ஆண்டும் மர்மான முறையில் மாயமாகி விபத்தில் சிக்கிய 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் MH370 விபத்து ஆகவில்லை என்ற செய்தி வெளிவந்துள்ளது. தற்போது வரை இந்த விமானம் எங்கே எப்படி எதனால் விபத்தானது என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து  தற்போதைய நிலையில்  விமானத்திற்கு விபத்து ஏற்படவில்லை என்றும் விமானியின் ஒரு செயலே காரணம் என்று பிரிட்டனை சேர்ந்த எக்ஸ்பர்ட் ஒருவர் கூறியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து MH 370 என்ற விமானம் 239 பயணிகளுடன் சீனாவுக்கு 2014 ம் ஆண்டு புறப்பட்டு சென்றது. செல்லும்போது நடு வழியில் திடீரென மாயமானது. தென் சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென காணாமல் சென்றதை சாட்டிலைட் மூலம் கண்டுபிடித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து தேடும் போது விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. அதனால் விமானத்திற்கு விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று இந்த விமானத்தை தேடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகியும், விமானத்திற்கு என்ன ஆனது என்பதையும் எங்கு இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி விபத்தில் சிக்கி இருந்தால் விமானத்தின் ஏதாவது ஒரு பாகம் கிடைத்திருக்கும் ஆனால் அதும் கிடைக்கவில்லை. விமானத்தில் சென்ற 239 பயணிகளின் உறவினர்கள் விபத்து எப்படி ஆனது எதனால் ஆனது என்று தெரியாமல் இன்றும் சிறு நம்பிக்கையில் திரும்பி வருவார்கள் என்று இருக்கின்றனர். மேலும் விமானம் விபத்தில் சிக்கியதற்கு விமானியின் சதிதிட்டமே காரணமாக இருக்கும் என்று பிரிட்டனை சேர்ந்த விமான நிபுணர் ஒருவர் கூறியுள்ள செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விமானத்தை இயக்கிய விமானி விமானத்தில் பயணிக்கும் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு கடலுக்குள் செலுத்தியுள்ளார். 

இதனால், விமானத்தில் சென்ற 239 பேரும் கடலுக்கு அடியில் சென்று மரணத்தை அடைந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். அதோடு அந்த விமானியின்  தனிப்பட்ட பிரச்சினை அவரது மனநலனை பாதிப்பால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை இந்த விமானம் எங்கு விழுந்தது, விபத்திற்கான காரணம் என்ன என்று அறியப்பட முடியவில்லை. முன்னதாக இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை 2017 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. ஆனாலும் தற்போது மீண்டும் இந்த 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் MH370 விபத்து ஆகவில்லை விமானியால் கொலை செய்யப்பட்டுள்ளது என்று எக்ஸ்பார்ட் தகவல் வெளியிட்டுள்ளது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொலைந்து போன  239 பேரின் குடும்பத்தினர் தரப்பில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது