24 special

உங்களையெல்லாம்...! சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழக்கில் நீதிபதி அல்லி அடித்த அடி..!


திமுகவின் தலைமை கழக பேச்சாளராக உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது பேச்சில் சில முக்கிய அதிகாரிகளை குறிப்பாக பெண்களை தவறாக சித்தரித்து விமர்சித்தது பெரும் சர்ச்சையாக எழுந்தது. முதலில் கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி அவதூராகவும் தரகுறைவாகவும் பேசினார். 


சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது பெரும் விவாத பொருளாகவும் இது மாறியது.  பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனால் திமுக தலைமை சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பை வெளியிட்டது. சில மாதங்களுக்கு அவர் கட்சியின் எந்த நடவடிக்கைகள் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைக்கப்படாமல் இருந்தார் பிறகு கடந்த மே மாதத்தில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். 

கட்சியில் சேர்க்கப்பட்டவுடன் கொடுங்கையூரில் திமுக கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநர் ஆர் என்  ரவி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள குஷ்புவை பற்றியும் அவமரியாதையாக தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இவரின் அநாகரிகமான பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மிகவும் கோபத்தில் தனது கண்டனங்களை செய்தியாளர்கள் மத்தியில் முன் வைத்தார். செந்தில் பாலாஜியின் கைது போன்ற விவகாரத்தால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படுவதை மாற்றுவதற்காகவே இது போன்ற பேச்சாளர்களுக்கு தீனி போட்டு திமுக வளர்த்து வருகிறது என குஷ்பு கடுமையாகவே விமர்சித்தார். 

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சாளர் திமுகவில் பெரும் விமர்சனங்கள் குவிந்த நிலையில் அவரை கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுவதுமாக நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியிருந்தார். இதற்கிடையில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இவரின் அநாகரிக பேச்சுக்கு புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். என்னதான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக திமுக அறிவித்தாலும் அவரை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக பல முயற்சிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. 

அதாவது திமுக வழக்கறிஞர்களை வைத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் எடுக்க முடிவெடுத்து ஜாமீன் மனுவையும் முதலில் தாக்கல் செய்துள்ளது, அந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி இந்த வீடியோவை தங்கள் குடும்பத்தினர் மத்தியில் உங்களால் கேட்க முடியுமா என்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார், பிறகு நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்  அவதூறாக பேசியதற்கு கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை ஜாமீனில் வெளிக்கொண்டு வருவதற்காக இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையில் நீதிபதி அல்லி ஏற்கனவே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது மூன்று வழக்குகள் உள்ளதாகவும் அதனால் அவருக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று ஜாமீன் கோரி கொடுக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார். இப்படி தொடர்ச்சியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் கேட்டு தொடர்ந்து திமுக பின்னடைவை சந்தித்து பெருத்த ஏமாற்றத்தை திமுக சந்தித்து வருகிறது.