திமுக கட்சியில் உள்ள அமைச்சர்கள் வீடுகளில் தற்பொழுது தொடர்ச்சியாக நடந்து வரும் அமலாக்கத்துறை மற்றும் வருமானத்துறை சோதனையால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மட்டுமில்லாமல் திமுக கட்சியே கதி கலங்கி உள்ளது என அனைத்து அரசியல் பார்வையாளர்களுமே கூறும் அளவிற்கு உள்ளது தற்போதைய நிலை! மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் காரணமாக அரசியல் ரீதியாக பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார்! சபாபதி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேடையில் பேசும்போது “ஆட்சியே போனாலும் கவலை இல்லை நான் பாஜகவை எதிர்ப்பேன் எனக்கு கொள்கை தான் முக்கியம்” என்று கூறியது திமுக கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் இடையே இதனை ஏன் முதல்வர் இப்பொது கூறவேண்டும் என கேள்வி மட்டுமல்லாது சர்ச்சையையும் எழும்பியது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா திமுக ஆட்சி கலைய வாய்ப்புள்ளது என்று கூறியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எச் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் பாதுகாப்பு பேரவை சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்து கோயிலுக்குள் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி இந்து அல்லாதோர் நுழைவது சட்டவிரோதம் என்றும் தமிழக அரசு மட்டுமே மத சார்பற்றது ஆனால் இந்த சமய அறநிலை துறை என்பது மதச்சார்புடையது என்று கூறினார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து செயல்களையும் செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டிய நிலையில் இந்து அறநிலையத்துறை என்பது இந்து மதத்தை பண்பாட்டை வளர்க்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்
இந்த அறநிலையத்துறை இந்து மதத்தின் பண்பாட்டை வளர்க்கவில்லை என்பதற்கு உதாரணமாக பழநி அருகே களிமந்தயம் உள்ள கோவிலில் பக்தர்கள் தானமாக வழங்கிய பசுக்கள் கோசாலையில் பராமரிப்பின்றி இருப்பதாகவும் இதனால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மேலும் மாடுகளை கேரளாவிற்கு அனுப்பி அடி மாடாக பயன்படுத்துகிறார்கள் என்றும் பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு கோசாலை அமைந்துள்ள இடத்தில் சிப்காட் நிறுவனத்தை கொண்டு வர சேகர் பாபு முயற்சி செய்து வருகிறார் என்ற பரபரப்பு தகவலையும் எச். ராஜா தெரிவித்தார். மேலும் இந்து சமய அறநிலைத்துறை மட்டுமே அரசுக்கு சொந்தமானது தவிர இந்த கோவில்கள் அரசுக்கு சொந்தமானது அல்ல அது மக்களுக்கு சொந்தமானது என்று கூறினார்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் செந்தில் பாலாஜி வழக்கில் அவருக்கு மிகப் பெரும் ஆதரவாக இருப்பதைய சுட்டிக்காட்டி சிபிஐ இன் அடுத்த சோதனை முதலமைச்சர் வீட்டிற்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர் இருப்பதாகவும் சட்ட ஒழுங்கை கடைபிடிக்காமல் குற்றம் செய்த அமைச்சரை பாதுகாத்து மேலும் அவரைப் 38 நாட்கள் ஆகியும் மருத்துவமனையில் மறைத்து வைத்திருப்பதும் சட்ட ஒழுங்கை மதிக்காமல் முதலமைச்சர் செயல்படுகிறார் என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது என எச் ராஜா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தவறான வழி நடத்துதலின்படி செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி கலைக்கப்படலாம் என்று எச் ராஜா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த விவரம் வெளிவந்த காரணத்தினால் அரசியல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ என திமுகவினர் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் அறிவாலய வட்டாரத்தில் காரணம் இல்லாமல் ஹெச்.ராஜா இப்படி கூறமாட்டாரே என பேச்சுக்கள் அடிபடுவதாக செய்திகள் கிடைத்துள்ளது.