24 special

எவ்வளவு சொல்லியும் கேட்காத எம்.பி செந்தில்குமார் ..!கடுப்பில் அறிவாலயம் வைத்த ஆப்பு..!

Senthilkumar,udhayanithi
Senthilkumar,udhayanithi

திமுகவை சேர்ந்த தர்மபுரி எம்பி செந்தில் குமார் மதம் சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து தானும் பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது மட்டுமல்லாமல் திமுகவையும் பெரும் சர்ச்சையில் தள்ளி விடுகிறார். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் கூறலாம், முதலில் தர்மபுரி மாவட்டத்தில் ஏரியை சீரமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பூமி பூஜை ஒன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட எம் பி செந்தில் குமார் அரசு பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக சம்பிரதாயப் பணிகளை செய்ய வேண்டும் என்றால் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் அழைக்க வேண்டும் அல்லவா ஒரு கிறிஸ்துவ பாதிரியாரை கூப்பிடுங்கள், மசூதி இமாமையும் கூப்பிடுங்கள் என்று கூறி அவ்விழாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். 


இரண்டாவது சம்பவமாக, தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டையில் புதிய நூலகம் அமைப்பதற்காக அனுமதி பெறப்பட்டு நூலகத்தை அமைப்பதற்கு முதலில் பூமி பூஜை போடுவது ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.பி  செந்தில்குமார் மறுபடியும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பூமி பூஜை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கிருந்த பூஜை பொருட்கள் அனைத்தையும் காலில் எட்டி உதைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இவரின் இந்த செயலால் திமுகவிற்குள்ளேயே கடும் வாக்குவாதங்களும், இவருக்கு எதிரான கருத்துகளும் நிலவியது. சமூக வலைதளங்களிலும் இவர் செய்த செயல்கள் அனைத்தும் வீடியோவாக வெளியாகி மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது மட்டுமல்லால் திமுக மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பாஜக சார்பில் பல கண்டனங்களும் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இவர் இந்து மதம் சார்ந்த சர்ச்சைகளில் ஈடுபடுகிறார் என்ற பெயரும் மக்கள் மத்தியில் பதிவானது! இது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது கருத்தை பதிவிடுகிறேன் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை வேறு பதிவிடுவார். 

இந்த நிலையில், மீண்டும் இந்துக்களை புண்படுத்தும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது எம் பி செந்தில் குமார் தனியார் டிவிக்கு பொது சிவில் சட்டம் குறித்து பேட்டி அளித்த பொழுது, பாஜக பொது சிவில் சட்டத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. வட மாநிலங்களில் சிவன் பார்வதிக்கு விநாயகருடன் முடிக்கப்பட்டது. தென் மாநிலத்திற்கு வந்தால் மட்டுமே முருகன் என்பவர் இருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரியும்! இதனால் அவர்களுக்கு சிவன் பார்வதிக்கிடையில் ......நடந்ததா என்பது தெரியவில்லை என்று சிரித்துக் கொண்டு நக்கல் அடிக்கும் வகையில் இந்த கருத்தை கூறியது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் அறிவாலய தலைமை தர்மபுரி எம்பி செந்தில்குமார் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரை அழைத்து கடுமையான டோஸ் விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுவும் உதயநிதி தரப்பில் இவர் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக சில அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே பாஜக பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்ததால் சிறுபான்மையினர் ஓட்டுகள் நமக்கு வருமா என்று தெரியவில்லை இந்த நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வந்து இவர்  நம்மை அதள  பாதாளத்தில் தள்ளி விட்டாலும் விடுவார் இதனால் இவருக்கு அடுத்த தேர்தலில் சீட்டு கொடுக்கவே கூடாது என்று திமுக தலைமை உறுதியாக சில முடிவுகளை எடுத்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.