24 special

செந்தில் பாலாஜி செய்த அனைத்து திட்டமும் க்ளோஸ்...!இனி இது தான் முடிவு...!

Senthil balaji
Senthil balaji

செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி திருப்பங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அரங்கேறி வந்த நிலையில் சட்ட போராட்டங்கள் காரணமாக சிறை செல்லாமல் செந்தில் பாலாஜி தப்பித்து வருகிறார்.இந்த சூழலில் இன்று நீதிமன்றத்தில் ஒரு பக்கம் செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த வழக்கு விசாரணையில் இருக்க தற்போது அடுத்தக்கட்டமாக கரூரில் பெரும் பரபரப்பு நிகழ்ந்து வருகிறது.


இன்று அதிகாலை முதல் மூன்றாவது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மற்றும் தம்பி அசோக் நண்பர்கள், உறவினர்கள்,வீடு அலுவலகங்களில் என ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி இல்லத்தில் வருமானம் வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அங்கு இருந்து மூன்று முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறதாம்.

மேலும் கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் உணவகம், ஸ்ரீ ராம விலாஸ் வீவிங் பேக்டரி நிறுவனம், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனம் பாலவிநாயகர் கிரஷர் உரிமையாளர் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமாக கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் தற்பொழுது சோதனை நடைபெற்று வருகிறது ஒட்டுமொத்தமாக 

கரூர் மாவட்டத்தில் இதுவரை 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய போலீஸ் பாதுகாப்பு துணையுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.வருகை பதிவேட்டில் முக்கிய அரசு துறையை சேர்ந்த நபர்கள் வந்து சென்ற தகவலும் அன்றைய தினம் பெரும் தொகை கைமாறியதும் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் வேலையில் பல்வேறு ஆதாரங்களை வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறை இணைந்து கைப்பற்றி இருக்கும் வேலையில் தற்போது நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மூலம் தப்பித்து வரும் செந்தில் பாலாஜிக்கு வருமான வரித்துறை, அமலாக்க துறை, நீதிமன்றமும் கைவிடும் சூழல் உண்டாகி இருக்கிறதாம்.தொடர்ச்சியாக ஆளுநர் முதல்வர் இடையே செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் உண்டான கருத்து வேறுபாடு, உச்ச நீதிமன்றம் வரை சென்ற செந்தில் பாலாஜி வழக்கு, சாமானிய பொதுமக்கள் மத்தியிலும் செந்தில் பாலாஜியை ஏன் முதல்வர் சிரமப்பட்டு பாதுகாக்கிறார் என்ற கேள்வி என மூன்று காரணங்களால் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு அடிபட்டு போயிருக்கிறதாம்.

செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் கொடுக்கப்பட்ட கைதி எண் 1440 எண் ரெடியாக இருப்பதாகவும் இந்த வார இறுதிக்குள் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் எனவும் சட்டத்தின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என்கின்றனர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடைபெறும் நிகழ்வுகளை அறிந்தவர்கள்.