24 special

அடுத்து களத்தில் இறங்கும் ஆளுநர்...!இனி ஆளும் கட்சி டோட்டல் டேமேஜ் தான்...!

Rn ravi ,mk stalin
Rn ravi ,mk stalin

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர். என் ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.அமலாக்கத்துறை வழக்கிற்கு இடையே கடந்த வாரம் திடீரென செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். செந்தில் பாலாஜி பதவியில் தொடர கூடாது. அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தால் அவர் மீதான விசாரணை சரியான போக்கில் நடக்காது.


அவரின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றால் அவர் அமைச்சரவையில் நீடிக்க கூடாது. அதனால் அவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்குகிறேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் தமிழ்நாடு அரசோ , செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.ஆனாலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும், கட்சிக்கே ஆபத்து வந்தாலும் செந்தில் பாலாஜி விஷயத்தில் முடிவை மாற்ற மாட்டோம் என்று அடம்பிடிக்கிறது திமுக.

அதே வேளையில்  சரியாக 5 மணி நேரம் கழித்து ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றிக்கொண்டார்,அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .

இந்த சூழலில் தான் தற்போது டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர். என் ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து வருகிறார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி உடன் ஆர். என் ரவி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்த நிலையில் தற்போது இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

என்ன செய்தாவது செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை நீக்குவேன் என்ற குறிக்கோலோடு. டெல்லி சென்று ஆலோசனை நடத்தி வருகிறார் ஆளுநர் .... மேலும் உள்துறை அமைச்சகத்திடம் , செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரும் பட்சத்தில் விசாரனை சரியான போக்கில் நடக்காது, இத்தனை ஆண்டுகாலம் அவர் மீதுள்ள வழக்கை எப்படி இழுத்தடிப்பு செய்தார் என்பதை கவனத்தில் கொண்டு , அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் கோரிக்கை வைத்து வருகிறாராம்... இதனால் என்ன செய்தாவது செந்தில் பாலாஜியை காப்பாற்றி விடவேண்டும் என்று முழு மூச்சுடன் வேலை செய்து வரும் திமுகவிற்கு இது புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.