செந்தில் பாலாஜி வழக்கு ஜவ்வாக இழுத்து கொண்டு இருக்க செந்தில் பாலாஜி மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி திமுக அரசு செந்தில் பாலாஜியை தற்காத்து வருகிறது.இந்த சூழலில் தான் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அமலாக்க துறை விசாரணைக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வருகிறார் இவை அனைத்தும் தினமும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த சூழலில் தான் தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் முதல்வர் இடையே மூண்ட அதிகார மோதல் தற்போது வேறு விதத்தில் ஆளும் கட்சியான திமுகவிற்கும் அதன் அதிகார தலைமைக்கும் விழுந்து இருக்கிறதாம்.தொடர்ச்சியாக இதுவரை இந்தியாவில் இல்லாத அளவாக வருமான வரித்துறை செந்தில் பாலாஜி சகோதரர் தொடங்கி அவருடன் தொடர்புடைய இடங்களில் தொடர்சியாக வருமான வரித்துறை ரெய்டு நடக்கிறது.
இங்குதான் பெரும் சிக்கல் உண்டாகி இருக்கிறதாம் வருமான வரித்துறை தமிழக அரசின் முக்கிய வருமானத்திற்கு காரணமான துறை மூலம் வரும் வருமானத்தை தனி நபர்களுக்கு பகிர்ந்து அளித்த விவரம் பல்வேறு கட்ட சோதனையில் கண்டறியப்பட்டு இருக்கிறதாம்.இதன் விளைவாக தான் ஒருமுறை தற்போது 11வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேல் சோதனை செய்து வருகிறார்களாம். முதல்வர் ஸ்டாலின் திருமண விழா ஒன்றில் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் பரவாயில்லை கொள்கையில் உறுதியாக இருப்போம் என பேசி இருந்தார்.
அவர் பேசி மூன்று நாட்கள் கூட முழுதாக தாண்டுவதற்குள் இப்போது மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று இருப்பதும், உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடைபெற்று வருவதும்.இவை அனைத்தையும் தாண்டி அமலாக்க துறை விசாரணை வளையத்திற்குள் GST முறைகேடுகளை சேர்த்து இருப்பதும் பெரும் பின்னடவை ஆளும் கட்சியான திமுகவிற்கு கொடுத்து இருக்கிறதாம். ஒன்று செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் இல்லை என்றால் பெரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் இனியும் தாமதம் செய்ய முதல்வருக்கு வாய்ப்பே இல்லையாம்.