
தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த நடிகர்கள் சிலர் தங்கள் அரசியல் கருத்துக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்த கருத்திற்கும் இரண்டு வருடம் கழித்து இப்போது ஐஸ்வர்யா எடுத்த முடிவையும் ஒப்பிட்டு பாஜகவினர் வெளுத்து எடுத்து வருகின்றனர்.
பாஜகவுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கும் காண்பிக்கும் வகையில் இந்தி மொழிக்கு எதிராக திமுக மற்றும் அவரது ஆதரவு நடிகர்கள் தங்களுடைய கருத்துக்களை 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டி ஷர்ட் அணிந்து பதிவு செய்தனர் இதில் இளைஞர்கள், அரசியல் எதிர்க்கட்சிகள் , நடிகர் நடிகைகள் என சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர் .

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தம்பியுடன் சேர்ந்து " இந்தி தெரியாது போடா என்ற டீ ஷர்ட் அணிந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை அப்போதே இணையவாசிகள் பங்காகமாக கலாய்த்து திட்டி தீர்த்தனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ட்ரைவர் ஜமுனா என்ற திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பை படக்குழு நடத்தியது, இதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா நடிப்பிற்கு மொழி தடை கிடையாது என பேசி இருந்தார், இது தான் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தி தெரியாது போடா என டிஷர்ட் போட்ட போது இந்த அறிவு எங்கே போனது, நடிக்க மொழி தடை கிடையாது ஆனால் படிக்க மட்டும் மொழி தடை போடலமோ இதெல்லாம் ஒரு பிழைப்பு என பாஜகவினர் நேரடியாக சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.