![central goverment](https://www.tnnews24air.com/storage/gallery/G20OTo5O0gdnRFHOHDL7OvnYZD1sQgmNJUa9nDco.jpg)
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு அதிரடி முடிவை எடுத்து இருக்கின்றது. இது சிறுபான்மையினர் மக்கள் மத்தியில் பெருத்த வர வாய்ப்பு பெற்று இருக்கின்றது.
CAA குடியுரிமை திருத்த சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இதற்கான விதிமுறைகள் சரியாக வகுக்கப்படாததால் அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஏஏ விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர கால தாமதமாக ஏற்பட்டது. எனவே இது தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்கு தேவையான கால அவகாசத்தை ஏழாவது முறையாக நீட்டித்து உள்ளது மத்திய உள்துறை. அதன்படி மாநிலங்களவை குழுவுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலும், மக்களவை குழுவுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி வரையும் கால அவகாசம் வழங்கி இருக்கின்றது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மற்றும் மேக்சனா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது வசித்து வரும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த, இந்துக்கள், சீக்கியர்கள் ஜெயின்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி சேர்ந்தவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இருப்பினும் குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படாத காரணத்தினால் 1955 ஐந்தாவது பிரிவின்படி குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கின்றது. எனவே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
![](https://www.tnnews24air.com/storage/gallery/nci6oy7kIuPevIz4nBXLpHflvf89NsY2tctnmlTH.jpg)
அதனை மாவட்ட ஆட்சியர் சரி பார்த்து அதன்படி அவர்களுக்கு குடியுரிமை வழங்கி சான்று வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.இதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு மாறி சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு கட்சியாக பாஜக இருக்கிறது என மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுகின்றனர்.