சனாதன விவகாரத்தில் கலந்து கொண்டதற்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் எடுத்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சட்டம் தீர்ப்பளித்தால் அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் தற்பொழுது அடுத்த விவகாரத்திலும் அமைச்சர் சேகர்பாபு சிக்கி உள்ளார். இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு கீழ் வரும் நிர்வாகத்தில் குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை பயன்படுத்தும் மொபைல் செயலியில் உள்ள தமிழக அரசின் கோபுர சின்னம் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக சர்ச்சை எழுந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் சின்னம் தான் தமிழக அரசின் சின்னமாக இருந்து வருகிறது. இதுதான் அறநிலையத்துறைக்கும் சின்னமாக இருந்தது, இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்து சமய அறநிலைத்துறையின் மொபைல் செயலியில் இந்த சின்னம் இல்லை இது நீக்கப்பட்டு விட்டது எனக்கூறி சமூக வலைதில் தளத்தில் புகார்கள் எழுந்தன.
ஆனால் இந்து சமய அறநிலைத்துறை இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை, திடீரென இந்த இந்து சமய அறநிலைத்துறை செயலியில் இந்த சின்னம் மாற்றப்பட்டு இருப்பது வலதுசாரிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஏற்கனவே ராம.ரவிக்குமார் கண்டன அறிக்கை வெளியிட்ட நிலையில் சிவ சேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் திருமுருக தினேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம், என இந்து சமய அறநிலை துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்ளிட்ட தமிழக அரசு துறைகளில் தற்போது அறிமுகப்படுத்தி உள்ள மொபைல் செயலியில் முதல் பக்கத்தில்
தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இந்து சமய அறநிலை துறை எதிர்ப்பு கிளம்பியும் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்காமல் இருந்து வருகிறது. எதிர்ப்பு வந்தவுடன் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மொபைல் செயலியில் அரசின் கோபுரம் மாற்றப்பட்டுள்ளது, ஆனால் இந்து சமய அறநிலையத்துறை மாற்றவில்லை இது இந்து சமய அறநிலைத்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது. இந்து சமய அறநிலைத்துறையை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது, தமிழக அரசு துறைகளில் எக்காரணத்தை கொண்டும் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது, இந்து சமய அடையாளங்களை அழிக்க வேண்டும் என்ற வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இச்செய்தி இந்துக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.
சிவசேனா சார்பில் ஜனநாயகம் மற்றும் சட்ட ரீதியாக மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதை இந்த அறிக்கை மூலமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்துகிறேன் என அந்த அறிக்கையில் திருமுருக தினேஷ் கூறியுள்ளார். ஏற்கனவே சனாதன விவகாரத்தில் எந்த நேரத்தில் பதவி போகுமோ என பதவி ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது, இது குறித்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு எதுவும் பேசாமல் இருப்பது வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக அரசுக்கு விரைவில் மிகப்பெரிய பின்னடைவாக எழும் எனவும் சேகர்பாபு தேர்தல் வரும் நேரத்தில் இந்த தவறை செய்வது கண்டிப்பாக ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் இந்து சமுதாய மக்களை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தும் என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது