தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவது நாளுக்கு நாள் அண்ணாமலை மேற்கொண்டுள்ள யாத்திரை மூலம் உறுதியாகி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரை எப்படி பாஜகவின் வளர்ச்சியை தடுப்பது என்று நாளுக்கு நாள் தங்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நிலைமை இப்படி இருக்க சென்னையில் அண்ணாமலை வீட்டு வாசலில் இருக்கும் கொடி கம்பத்தை தமிழக காவல்துறை அகற்றியது அதை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்த திமுக அரசு தொடர்ச்சியாக அவரை பல்வேறு வழக்குகளில் சிறையில் வைத்து இருக்கிறது.
இந்நிலையில் தான் அண்ணாமலை அன்றைய தினமே ஒரு கொடி கம்பத்தை அகற்றிவிட்டீர்கள் சந்தோசம் வரும் நவம்பர் 1 முதல் தினமும் 100 கொடி கம்பம் என மொத்தம் 10 ஆயிரம் கொடி கம்பம் நடுவோம் பாருங்கள் என சவால் விடுதார் அண்ணாமலை.அண்ணாமலை சொன்னது போல் நேற்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொடி கம்பம் நட திறண்டனர், வீடு, தெரு, பொது இடம், பட்டா இடம், ஏற்கனவே மற்ற கட்சிகள் கொடிகள் இருக்கும் இடம் என ஒரே நாளில் 2 ஆயிரம் கொடிகளை நட பாஜகவினர் கூடினர். இது குறித்து மாநில உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்க சில நிமிடங்களில் முக்கிய அதிகாரி ஒருவர் மூலம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர்களுக்கு தகவல் சென்றது.
அடுத்த சில நிமிடங்களில் பாஜகவினரை ஒவ்வொரு இடத்திலும் கொடி ஏற்ற விடாமல் போலீசார் தடுத்து நிறுத்த மாநிலம் முழுவதும் பல இடங்கள் ஸ்தம்பித்தன. இதையடுத்து சென்னையில் இலங்கை செல்லும் முன்பு பேட்டி கொடுத்த அண்ணாமலை எங்களுக்கும் திமுகவிற்கும் இடையே நடக்கும் அரசியல் மோதலில் இருந்து காவல்துறை வெளியேறவேண்டும்.இல்லை சில அதிகாரிகள் நாங்கள் உள்ளே வருவோம் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுவோம் என்றால் எனக்கும் காவல்துறை அந்தரங்கம் தெரியும் பொறுத்து இருந்து பாருங்கள் என எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை.
இந்நிலையில்தான் மாநில உளவுத்துறை தமிழக பாஜக நிலவரம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கே நேரடியாக அறிக்கை கொடுத்து இருக்கிறதாம், முன்பு போல் பாஜகவினர் இல்லை களத்தில் குறைந்தது 100 முதல் 200 நபர்கள் கூடி விடுகிறார்கள், கொடி கம்பம் நடும் நிகழ்வை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் தற்போது நல்லது இல்லை என்றால் பாஜக அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் போலீசாரை திணற செய்யும் நிர்வாக ரீதியாக கொடி கம்பம் நடும் நிகழ்வை எடுத்து செல்லும் என குறிப்பிட்டு இருக்கிறதாம் உளவு துறை.ஏற்கனவே ஒரு கொடி கம்பத்தை அகற்றி தேன் கூட்டில் கைவைத்தது போன்று ஆளும் திமுக அரசு காவல்துறை மூலம் பாதிப்பை சமாளித்து வரும் நிலையில் நேற்றைய தினம் பாஜகவினர் அமைத்த கொடி கம்பத்தை பிடுங்கியதன் மூலம் பெரும் தவறை மீண்டும் செய்து இருப்பதாகவே தமிழக அரசியல் களத்தை கவனித்து வருபவர்கள் கூறுகின்றனர்.
மேலும் உளவுத்துறை தரப்பில் பாஜகவினர் தங்கள் வீடுகள் தோறும் பாஜகவினர் மட்டுமின்றி பாஜகவினர் பயன்படுத்தும் வாகனங்கள் என பல வழிகளில் கொடியை பயன்படுத்த விரைவில் அண்ணாமலை திட்டம் வகுத்து இருப்பதாகவும் அப்படி ஒன்று நடந்தால் பாஜக தொண்டர்கள் அனைத்து மட்டத்திற்கும் சென்று கொடியை ஏற்றியே தீருவார்கள் எனவும் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.