பாஜக வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டு திமுகவிற்கு வயிறு எரிகிறது. பாஜகவை பொறுத்தவரை திமுக ஆட்சியில் ஏதும் நியாமாக நடப்பதில்லை புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் காட்டம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்புறம் இருந்த கொடிக்கம்பத்தை அகற்ற போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதால், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அண்ணாமலை நவம்பர் 1ம் தேதி 10 ஆயிரம் கொடி கம்பம் நடப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொடி கம்பம் நிறுவ முயன்ற போது பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிய என் மண் என் மக்கள் நடைப்பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன் பகுதியாக 5ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக பாஜக பெண் நிர்வாகிகளுக்கு வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பு விடுத்தது வருகின்றனர்.
அதன்படி, புதுக்கோட்டை நகர்ப்பகுதி அருகே உள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடி கிழிந்து இருப்பதால் அதனை நீக்கி புதிய கொடி மாற்ற பாஜகவினர் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறை கிழிந்த கொடியை மாற்ற கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் குவிந்துள்ளனர். அதனை தொடர்ந்து காவல்துறையுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையில் முறையான அனுமதி பெற்று பிறகு கொடியை மற்ற அறிவுறுத்தினர். இதனால் அபபகுதியில் சிறிது நேரம் பாப்பரப்பு ஏற்பட்டது.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் விஜயகுமார், அண்ணாமலை 5ம் தேதி வரவுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகிறோம். பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்கிறோம். திமுகவை போல் கட்சி தலைவர்கள் வந்தால் தலைக்கு 200 ரூபாய் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்ட மாட்டோம். பாஜகவுக்கு தன்னெழுச்சியாக மக்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இன்று கொடியேற்றாமல் இருந்தது திமுகவிற்கு பயந்து கிடையாது. முடியான அனுமதி பெற்று எங்கள் மாவட்ட தலைவர் அண்ணாமலை சொன்னபடி நிறைவேற்றுவோம். பாஜக கொடியை பார்ப்பது பார்த்து திமுகவிற்கு ஆதி வயிறு எரிகிறது. பாஜகவின் வளர்ச்சியை கண்டு 100 சதவீதம் பயந்துவிட்டது திமுக.
தமிழகத்தில் திமுக எதில் ஊழல் செய்யலாம், எங்கே கமிஷன் பெறலாம் அதில் தான் கவனம் செலுத்தி வருகிறது. மைக்கின் பிரச்சனையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவை பொறுத்தவரை இந்த ஆட்சியில் எதுவும் நியமாக நாடாகும் என்று நம்பிக்கை இல்லை. திமுக எங்கே டாஸ்மாக்கை திறக்கலாம் என்று தான் முனைப்பு காட்டுகின்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள பல் மருத்துவ கல்லூரியை இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திறக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக திறக்க வில்லை என்றால், பாஜக சார்பில் மாநில தலைவர் முன்னிலையில் போராட்டம் நடத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.