திமுக காங்கிரஸ் கடந்த 2006 முதல் 2014 வரை 10 ஆண்டுகால ஆட்சியில் கூட்டணியில் இருந்து வந்தது. குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில் தமிழகத்திற்கு பல துறைகளில் முக்கிய அமைச்சர் பதவிகளை கேட்டு வாங்கினார். கனிமொழி, டி.ஆர்.பாலு ,தயாநிதி மாறன் ,ஆ ராசா முதலியோர் முக்கியத்துறைகளில் அமைச்சராக இருந்தனர். தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் அனைத்து கட்சிகளும் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன!
மேலும் சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முழுமையாக பங்கு பெறாத நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட கலந்து கொள்ளாமல் வெளியேறினார் என்ற செய்திகள் வெளியாகி உள்ள நிலையில். இதனைத் தொடர்ந்து ஒரு திருமண விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசும்போது இந்தியாவிற்கு தேவை திராவிட மாடல் ஆட்சி என்று கூறியது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்திஉள்ளது. . காரணம் மற்ற மாநில எதிர்க்கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என்று கூறிவரும் நிலையில் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என ஸ்டாலின் கடந்த தேர்தலில் கூறியது போன்று இந்த முறை கூறவில்லை என்ற சலசலப்பு காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையில் பெங்களூரில் நடைபெறவுள்ள அடுத்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது மற்றும். மேலும் திமுக சார்பில் முதல்வருக்கு பதில் வேறு யாரையாவது அனுப்பலாம் என அறிவாலய தலைமை யோசித்து வருவதாகவும், 'தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் திராவிடமாடல் தேவை' என்று முதல்வர் கூறியது காங்கிரஸ் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின் இந்த உரையாடல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மத்தியில் காங்கிரஸுடன் ஒன்றிணைய வேண்டும் என்ற ஆர்வத்தை குறைத்துவிட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
திமுக வின் இந்த நிலைப்பாடு குறித்து வேணுகோபால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன, ராகுலும் இதனை கவனமாக கேட்டுக்கொண்டார் எனவும் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே இருக்கும் நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினிடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் வருகின்ற 2024-ம் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து பாட்னாவில் நடந்த சரத்பவார் தேசியவாத கட்சியின் பிரிவு மற்ற மாநில காட்சிகளை யோசிக்க வைத்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவை வைத்துக்கொண்டு 2024 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பில்லாத காரணத்தினாலும் திமுக இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் சில அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இன்னும் 6 மாத காலத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிவிடும் என்றும் கூறுகின்றனர்.