24 special

மலையிடமிருந்து பறந்த உத்தரவு ...!வச்சு செய்யப்போகும் காவிகள்...!

Mkstalin,annamalai
Mkstalin,annamalai

கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திமுக முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலை திமுக பைல்ஸ் 1 என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில் திமுக கட்சியினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் தனது நடை பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கு முன் திமுகவின் பைல்ஸ் 2 என்ற இரண்டாவது சொத்து பட்டியலை வெளியிட்ட பிறகுதான் நடைபயணம் மேற்கொள்வதாக முடிவில் உள்ளார். திமுக பைல்ஸ் முதல் சொத்து பட்டியலை வெளியிட்டதும் ஆடிப்போன திமுக பைல்ஸ் இரண்டாம் பாகத்தில் என்னென்ன தகவல்கள் வெளிவரப்போகிறதோ என்று நினைத்து பயந்து வருகிறது.


இந்நிலையில் திமுகவை வறுத்தெடுக்க அண்ணாமலைக்கு கிடைத்த அடுத்த ஆயுதமாக முதலமைச்சரின் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை பயன்படுத்த போகிறார். இந்த உரிமைத் தொகை திட்டம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் வெளியிடப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினர் .மேலும் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலை தனக்கு சாதகமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மகளிருக்கான உரிமை தொகை திட்டம் கலைஞரின் பிறந்தநாள் அன்று அமல்படுத்தப்படும் என்றும் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து உரிமைத்தொகை வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி  உள்ளது. 

குடும்பத் தலைவிக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் அறிவித்தபோது மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் தற்போது அது விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதால் அனைத்து மக்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் திமுக மீதான மக்கள் பார்வை மாறியுள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பல விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ள நிலையில் மக்கள் பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 18 வயது நிரம்பிய குடும்பத் தலைவிகள் மற்றும் ஆண்டு வருமானம் 2.50 இலட்சத்திற்கு மேல் உள்ள குடும்பத் தலைவிகள் மற்றும் நில வாரியத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் விதவை ஓய்வூதியம் பெறுபவர்கள் முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள் என்றும் 21 வயது நிரம்பிய குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்த மகளிருக்கான உரிமை திட்டம் செல்லுபடி ஆகும் என்றும் முதல்வர் கூறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் குடும்பத்தலைவிகளுக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் குறைந்த அளவே மகளிர் பயனடைவார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பான தனது கேள்வியை எழுப்பி உள்ளார். மேலும் மாநிலத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் திமுக  ஏன் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்துவிட்டு இன்னும் செயல்படுத்தாமல் இருக்கிறது என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பி வருகின்றனர். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் அறிக்கையில்  அனைத்து மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தபின் தகுதியின் அடிப்படையில் மகளிரை பிரிப்பது எந்த விதத்தில் நியாயம்?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மகளிர்ருக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வைத்து திமுகவிற்கு அண்ணாமலை அடுத்த குடைச்சலை கொடுக்க அண்ணாமலை ஆயத்தம் ஆகிவிட்டார் எனவும், இதனை மக்கள் மத்தியில் கடுமையாக விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் எடுத்து செல்ல அண்ணாமலை பாஜகவினருக்கு கட்டளை இட்டிருப்பதாகவும் கமலாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.