திருமண நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக அரசியல் பேசுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின் அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கும் கருத்து தற்போது அவரது ஆட்சிக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. அதிலும் ஆட்சி கல்விழ்ந்தாலும் பரவாயில்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியது தான் இங்கு புது வினையை உண்டாக்கி இருக்கிறது.
சென்னையில் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது இந்தியாவுக்கே பேராபத்து வந்திருக்கிறது. பேராபத்திலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பாஜக 2014-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்களா? கருப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்குவேன் என்று பிரதமர் மோடி கூறினார். ரூ.15 ரூபாயாவது அவர் வழங்கியிருக்கிறாரா. மாதம் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்ற வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டார்.
மோசமான சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட வேண்டும் என ஆவேசமாக பேசி இருந்தார் முதல்வர் ஸ்டாலின் இந்த நிலையில் தான் முதல்வர் பேச்சிற்கு அதே பாணியில் பதிலடி கொடுத்து இருக்கிறார் அண்ணாமலை அதில், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார்.
அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொல்லவில்லை. திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?
தங்கள் மருமகன் தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை? முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் திமுக அரசு?கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது என அண்ணாமலை முதல்வர் பேச்சிற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
உங்கள் மருமகன் தான் நிதி மோசடி செய்யும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே என அண்ணாமலை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் அடுத்த திருப்பம் முதல்வர் குடும்பத்தில் அரங்கேறுமோ என்ற அச்சத்தை திமுகவினருக்கு உண்டாக்கி இருக்கிறது.