24 special

அமெரிக்காவுக்கு ஒரு புதிய முகம் வேண்டும்....மூடி மறைக்காமல் பேசிய அர்னால்ட்!

Arnold, Trump, jo baiden
Arnold, Trump, jo baiden

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். அதற்கு முன்னதாக  டிரம்ப் பெண்கள் குறித்து அவதூறு பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க மக்களிடம்  டிரம்ப்க்கு எதிராக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தேர்தல் தொடங்க இன்னும் சில மாதமே உள்ள நிலையில் இருவரும் தீவிரமாக அரசியல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்தியா உட்பட உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட பாடிபில்டரும், பிரபல ஹாலிவுட் முன்னணி கதாநாயகனும், கலிபோர்னியா மாநில முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (76) அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்தது. 'அமெரிக்கர்களை குறித்து கவலைப்படுகிறேன். 2024 தேர்தலில் மீண்டும் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் போட்டி என்பது ஏமாற்றமடைய செய்கிறது. இருவருக்கும் அதிக வயதாகி விட்டது என்பதனால் மட்டுமல்ல; அவர்கள் சிறப்பானவர்கள் என்று நான் கருதவில்லை. 

வெள்ளை மாளிகையில் புதிய ரத்தம் வேண்டும். புதிய சிந்தனைகளை உடைய தலைவர்கள் வேண்டும். இரு கட்சிகளிலும் அப்படி ஒரு புதிய முகம் இல்லாதது கவலை அளிக்கிறது. பைடன் பேட்டி அளித்தால் அனைத்து பத்திரிகையாளர்களும் அதை படம் பிடிக்கின்றனர். டிரம்ப் எது கூறினாலும் அதையும் படம் பிடிக்கின்றனர். தலைப்பு செய்திகள் முழுவதும் பைடன் அல்லது டிரம்ப் குறித்தே உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு புதிய முகம் எவ்வாறு உருவாக முடியும்?

நாட்டின் முன் உள்ள பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள மிகுந்த திறன் படைத்த ஒருவர் வேண்டும். ஜான் கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் காலகட்ட பிரசாரம் போன்று தற்போது நடைபெறுவதில்லை. இரு கட்சிகளிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்கும் புதிய முகம் வேண்டும்" என்று தெரிவித்தார். தேர்தல் குறித்து அமெரிக்க மக்களின் மனநிலை ஆய்வறிக்கையில் பைடனின் மன ஆரோக்கியம் மற்றும் டிரம்ப் மீது உள்ள வழக்குகள் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதனிடையே ஆர்னால்டின் கருத்தும் ஒற்றுமையாக  பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.