24 special

முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே திமுகவிற்கு விடப் போகும் மிகப்பெரிய அடி...

mk stalin, annamalai
mk stalin, annamalai

'என் மண் என் மக்கள்' யாத்திரை தமிழகத்தின் தென் மாவட்டங்களை முடித்துவிட்டு கொங்கு பகுதிக்குள் நுழைந்து பின்னர் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை முடித்துவிட்டு தற்பொழுது டெல்டாவில் நுழைந்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் டெல்டாவில் அடங்கும். இதில் முதல்வர் ஸ்டாலின் சொந்த மாவட்டமான திருவாரூரில் வரவிருக்கும் நாட்களில் யாத்திரை செல்லவிருக்கிறது, இந்த நிலையில் இந்த யாத்திரையில் இன்று அண்ணாமலை தஞ்சாவூரில் பங்கேற்கிறார். திருவையாறு பகுதியில்  துவங்கிய யாத்திரை தஞ்சாவூர் வரை நீடிக்க இருக்கிறது. 


எட்டு கிலோமீட்டர் அண்ணாமலை இந்த யாத்திரையில் தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பகுதியில் நடக்கவிருக்கிறார். தொடர்ச்சியாக அவர் யாத்திரையின் போது அங்குள்ள விவசாய சங்கங்களை சந்தித்து அவர்களுடன் கலந்து உரையாட இருக்கிறார், மேலும் இன்று காலை அண்ணாமலை அவர்கள் யாத்திரையில் தஞ்சாவூர் அருகே வயலில் விவசாயிகளுடன் இறங்கி சேற்றில் நடவு நட்டு அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக உலா வருகின்றன. இது மட்டுமல்லாமல் மற்ற ஏரியா யாத்திரை எல்லாவற்றையும் விட டெல்டா யாத்திரை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளாராம்.

இது குறித்து கமலாலய வட்டத்தில் சில நிர்வாகிகளிடம் பேசிய பொழுது 'கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெறுவதற்கு காரணம் டெல்டா மாவட்டங்கள்தான். டெல்டா மாவட்டங்களில் தான் திமுக வெற்றி பெறுவதற்கு வாக்குகள் விகிதம் எதுவாக அமைந்தது, டெல்டா இல்லை என்றால் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது. இப்படி முதல்வரின் சொந்த மாவட்டமான டெல்டாவில் இந்த யாத்திரை இறங்கி அடிக்க வேண்டும். என அண்ணாமலை தெளிவாக இருக்கிறார், அதன் காரணமாக அண்ணாமலை பேசும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சொல்லி இருக்கிறார்' எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக காவிரியில் தண்ணீர் திறக்காதது போன்ற விஷயங்கள் குறுவை சாகுபடிகள் அதன் மூலம் பாதிக்கப்பட்டது என டெல்டா பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், அதன் காரணமாக டெல்டா பகுதி மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருந்து வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் இதன் காரணமாகத்தான் யாத்திரை டெல்டாவில் நின்று விளையாட வேண்டும் மற்ற இடங்களில் நடைபெற்ற யாத்திரையை விட டெல்டாவில் அதிக பகுதிகள் யாத்திரையில் நம்மால் கவர் செய்யப்பட வேண்டும் என அண்ணாமலை தனது டீமுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இதன் காரணமாக யாத்திரை குழுவினர் டெல்டா மாவட்டத்தின் பல பகுதிகளில் அண்ணாமலை யாத்திரை செல்லுமாறு பயணத்திட்டத்தை வடிவமைத்திருக்கின்றனர், முதல்வரின் சொந்த மண்ணிலேயே யாத்திரையால் பலத்தை அடியை அண்ணாமலை இதன் மூலம் காண்பிக்கப் போவதாக கமலாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்டா பகுதியில் இருந்து பாஜகவிற்கு வாக்குகள் அதிகம் திரும்புவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த தகவல் தற்பொழுது அறிவாலயத்திற்கும் எட்டியிருக்கிறது. டெல்டாவில் அண்ணாமலை யாத்திரைக்கு இறங்கிவிட்டார் என்ற செய்தி அறிவாலயத்துக்கு எட்டியவுடன் அறிவாலயம் இதன் காரணமாக சற்று சோர்வடைந்து இருப்பதாகவும் வேறு நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களில் இருந்து கூறப்படுகிறது. அடுத்த வாரம் முழுவதும் டெல்டாவில் அண்ணாமலை ஆடப்போவது சிறப்பான ஆட்டமாக இருக்கும் என யாத்திரை குழு தெரிவிக்கிறது...