24 special

பொங்கலுக்குள் மொத்த முகாமையும் தூக்கப் போகும் அமலாக்கத்துறை.... எல்லாமே ரெடி

duraimurugan, ponmudi
duraimurugan, ponmudi

கடந்த மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்க துறை மேற்கொண்ட சோதனையானது அமைச்சர் துரை முருகனை குறி வைத்துதான் என்ற அரசியல் வட்டாரங்களில் விமர்சிக்கப்பட்டது, அதேபோன்று மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 10 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்தை சம்மன் அனுப்பியது. அதில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா 30 நாட்கள் தலைமறைவாக இருந்து தற்போது கடந்த வாரம் இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்..


இந்த விசாரணையின் மூலம் பல தகவல்கள் வெளியானால் அரசியல் ரீதியாகவும் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் மாற்றங்களையும் அதிரடி நடவடிக்கைகளும் நிகழும் என்ற பரபரப்பு அனைவருக்கும் தொற்றியுள்ளது.. இவருக்கு அடுத்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது வேலூர் தொகுதியின் திமுக சார்பில் போட்டியிட்டார் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். அவரது தந்தை துரைமுருகன் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பொழுது கணக்கில் வராத 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பொழுது 11.55 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது இந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செல்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது இது குறித்து விசாரணை செய்ய அமலாக்கத்துறை இதில் ஈடுபட்டது. அதனால் திமுக எம்பி ஆக உள்ள கதிர்ஆனந்த் வருகின்ற 28ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இப்படி தொடர்ச்சியாக தந்தை மகன் அதாவது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடியும் செம்மண் குவாரி வழக்கில் விசாரணை மேற்கொள்ள வருகின்ற 30ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

அதாவது கடந்த ஆட்சி காலத்தில் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்பொழுது அவர் அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் அவரின் உறவினர்களுக்கு செம்மண் குவாரிகளை  வழங்கியதாகவும் அதன் மூலம் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு ரூபாய் 28 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக 2013 இல் விழுப்புரம் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது அந்த சோதனையில் கணக்கில் வராத இந்திய பணங்களையும் வெளிநாட்டுக் கரன்சிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். 

இவை அனைத்தும் கைப்பற்றப்பட்ட அன்று இரவே பொன்முடியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அமலாக்க துறையினர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் தற்பொழுது 4 மாத இடைவேளைக்கு பிறகு மறுபடியும் பொன்முடி நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதுபோன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய பிறகு அந்த நிலையில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அவர் கைது செய்யப்பட்டார். தற்பொழுது திமுகவின் முக்கிய தலைவர்களான இந்த மூவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர்களும் செந்தில் பாலாஜி போல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் இவர்கள் மீதும் செந்தில்பாலாஜி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் நடவடிக்கை எடுத்து சிறைக்கு  அனுப்ப அமலாக்க துறை திட்டமிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.