இந்தியாவின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் தயாராகியுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத காங்கிரஸ் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்வதையும், அதன் உள்நோக்கத்தையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
குறிப்பாக செங்கோல் விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி ஏன் இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் 1947ம் ஆண்டு பிரிட்டீஷ் அரசிடம் இருந்து அதிகாரப்பரிமாற்றம் நிகழ்வதை குறிப்பதற்காக “செங்கோல் பரிமாற்றம்” என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்ததே நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு தான். நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் செங்கோலை வெள்ளையர்களின் கையில் இருந்து பெருவது நமது அதிகாரத்தை திரும்ப பெற்றதை குறிக்கும் என யோசனை சொன்னது ராஜாஜியாகவே இருந்தாலும், அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தவர் நேரு தான். அவர் ஒப்புதல் அளித்த பிறகே ராஜாஜி 1500 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீனத்திடம் செங்கோல் செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார். அதனை உம்மிடி பங்காரு அவர்கள் கைகளால் செய்து, ஆதினத்திடம் ஒப்படைத்தார் என்பது வரலாறு.
இந்த வரலாற்றை எல்லாம் காங்கிரஸ் கட்சி அறிந்திடாதது இல்லை. இருப்பினும் எதிர்ப்பலைகள் வீச காரணம் என்னவென்றால், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் இந்த பொன்னான தருணத்தில், பிரதமர் மோடிக்கு இப்படியொரு பெருமை வந்து சேரப்போகிறதே என்பதை காங்கிரஸ் கட்சியில் ஜீரணித்துக்கொள்ளவில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது.
செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் புறக்கணிக்கிறது என கேள்வியெழுப்பியுள்ள அமித்ஷா, நேருவுக்கு தமிழகத்தின் சைவ மடத்தால் வழங்கப்பட்ட செங்கோலை ஊன்றுகோலாக்கியதே காங்கிரஸ் தான் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். பழமையான திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக கூறியுள்ள அமித்ஷா, ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் தெரிவிப்பது அவர்களது நடத்தையை காட்டுகிறது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
ஏற்கனவே பிரதமர் மோடியின் புகழ் பட்டி, தொட்டியைக் கடந்து பார் எங்கும் பரவியுள்ள நிலையில், பிரம்மாண்ட நாடாளுமன்ற திறப்பு விழா எங்கே அவரது புகழை உலகறிய நிலைக்கவைத்துவிடுமோ? என்ற அச்சம் காங்கிரஸ் கட்சியினரிடம் நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.