24 special

ரெய்டால் நொந்து போன செந்தில் பாலாஜி..!கண்டுகொள்ளாத திமுக

Senthil balaji,mk stalin
Senthil balaji,mk stalin

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களிலும் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் வருமானவரித்துறையினர். இப்படி சோதனையில் ஈடுபட்டு வரும் இடங்களில் எல்லாம் திமுகவின் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் குவிந்து தங்களது பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ள காரணத்தினால் சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கோவையில் கோல்டு வீனஸ் பகுதியில் திமுகவைச் சேர்ந்த செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதோடு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர். இப்படி திமுகவின் முக்கிய அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசியலே பரபரப்பாக இருந்து வருகிறது ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறை ரீதியான கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார். அதாவது ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிற நேரத்தில் அமைச்சர் தனது அலுவலகத்தில் இருந்து வெளிவந்ததால் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர்  சிரித்தபடியே இருங்க மீட்டிங் முடிச்சிட்டு வரேன் என்று கூறிவிட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். ஆனால் ரெய்டு விவகாரம் செந்தில்பாலாஜியை நிலைகுலைய வைத்தது என்றே தகவல்கள் கிடைத்துள்ளது.

காலையில் 50 இடங்களில் ரெய்டு என வெளிவந்த தகவல் பின்பு இடங்கள் நூறு இருநூறு என எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இது ஒரு நாள் சோதனை அல்ல ஒரு நாளுக்கு மேல் செல்லும் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஆவது வருமான வரித்துறை சோதனை நடைபெறும் என்றும், மேலும் இந்த சோதனையின் பொழுது வருமான வரித்துறையினர் கைப்பற்றும் ஆவணங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் அயல்நாட்டு பயணத்தில் இருக்கும் சமயத்தில் திமுகவின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி என் வீட்டில் ரெய்டு நடப்பது, ஏற்கனவே பதட்டத்தில் இருக்கும் திமுகவை மேலும் பதட்டம் அடைச் செய்துள்ளது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் ஆகிய இருவருக்கும் நெருக்கமான திமுகவின் அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகன் வீட்டில் ரெய்டு நடந்ததற்கே இனி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென முதல்வர் குடும்பம் யோசித்து வந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பது முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை மீண்டும் அச்சம்கொள்ள செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ஏதேனும் சிக்க கூடாத ஆவணங்கள் சிக்கி விட்டால் அவை அனைத்துமே செந்தில் பாலாஜிக்கும் திமுக விற்குமே ஆபத்தாக முடிந்து விடும், இதில்வேறு ஏற்கனவே செந்தில் பாலாஜி கட்சி மாறி வந்தவர், இது மட்டும் அல்லாமல் செந்தில் பாலாஜி இந்த ரெய்டு விவகாரத்தில் சிக்கினால் அவரைக் காப்பாற்றுவதற்காக சென்றாலும் கூட அது திமுகவிற்கு கெட்ட பெயராக அமைந்து விடும் என்று திமுகவினர் சிந்தித்து தற்போது இந்த ரெய்டு விவகாரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜியே பார்த்துக்கொள்ளட்டும் என திமுக கைவிட்டது தெரிகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.