வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பரப்பான அரசியல் சூழல் தற்போது நிலவி வருகிறது, இதனால் அனைத்து கட்சிகளும் தனது தேர்தல் கள பணிகளை தற்பொழுதே துவங்கி பரபரவென மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக மாறி உள்ள பாஜகவை திமுக முழுமூச்சுடன் எதிர்த்து வருவதும், வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம் என பாஜக சபதம் எடுத்திருப்பதும் பல்வேறு பரபரப்பான சூழ்நிலையை மேலும் உருவாக்கி வருகிறது, அதோடு கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் மகன் மற்றும் பேரன்பிள்ளைகளை பயனடைவார்கள் உங்களது பிள்ளைகள் மற்றும் உங்கள் வம்சாவளி பயனடைய வேண்டுமென்றால் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தார்.
பிரதமரின் இந்த கருத்திற்கு திமுக தரப்பிலிருந்து மறைமுகமான கண்டனங்கள் வெளியிடப்பட்டது. மேலும், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதற்கு கூட்டணி அமைத்த எதிர்க்கட்சிகளுடன் திமுகவின் சார்பில் இருந்து முதல்வர் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து திமுக பாஜக எதிர் எதிர் அரசியல் செய்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒரே மேடையில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது எப்படி நடக்கும் சாத்தியமா என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டாலும் இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் செய்திகளில் வெளியாகியுள்ளது.
அதாவது தென் மாநிலங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கிடையே இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கும் மாநிலங்களின் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் மாநில எல்லை உவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவே தலைமை வகிப்பார் மற்றும் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்பார்கள். கடந்த முறை நடைபெற்ற இந்த கூட்டம் கேரளாவில் நடைபெற்றது. இந்த முறை நடைபெற உள்ள 31 வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் தமிழகத்தில் நடைபெற உள்ளதாகவும், மாநிலங்களுக்கியையேயான பிரச்சனைகள் மற்றும் மற்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலினும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் ஒரே மேடையில் நேருக்கு நேர் சந்தித்து பேச நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலின் கர்நாடகா நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜகவில் ஒன்பது ஆண்டு கால சாதனையை விளக்க பொதுக்கூட்டம் மேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் அமித்ஷா கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்த பொழுது, இரவு வேளையில் திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதற்கு விளக்கம் தர வேண்டும் என்று தமிழக அரசு இருக்கும் மின்சார வாரியத்திற்கும் அமித் ஷாவின் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்த பொழுது திராவிட மாடல், ஒன்றிய அரசு என பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவை வைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் அமைச்சர் அமித் ஷா தரப்பிலும் முதல்வர் என்ன பேசுவார் என்பதை பார்த்து விடுவோம் என்று தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.