தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பல இடங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை எடுத்துக் கூறி பல மேடைப் பேச்சுகளை நடத்தி வருகிறார். கடந்த மாதம் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்ற திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அண்ணாமலையின் இந்த அதிரடி அரசியல் நகர்வு அகில இந்திய அளவில் திமுகவிற்கு எதிராக ஒரு டிரெண்டை உருவாக்கியது. அண்ணாமலை தன் கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் பெங்களூரில் இருக்கும் போது லஞ்சம் கொடுத்து வாங்கியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் அதற்கான விலைப்பட்டியலையும் வெளியிட்டார். பின் அதிரடி தொடக்கமாக திமுகவின் ஊழலை சுட்டிக்காட்டும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டது .
திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த முன்னேற்றத் திட்டமும் இல்லை மாறாக பொருளாதாரம் ,வேலை வாய்ப்பு, இளைஞர்களின் வளர்ச்சி,கல்வி விவசாயம் மந்தமடைந்த நிலையில் தான் இருக்கிறது . இதற்கிடையில் தமிழக மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டு திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சொத்தாக குவிக்கின்றனர் என்ற செய்தியும் அந்த வீடியோவில் இடம் பெற்றதை தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் அந்த வீடியோ ட்ரெண்ட் ஆனது! மேலும் திமுக அமைச்சர்களான பொன்முடி, டி .ஆர் பாலு, ஏ.வா. வேலு உள்ளிட்ட முதல் முக்கிய 12 அமைச்சர்களின் சொத்து பட்டியல் தனித்தனியாக வெளியிடப்பட்டது. மேலும் ரூபாய் 1,34 லட்சம் கோடி என்பது இவர்கள் சொத்துடன் சேர்த்து இவர்களின் உற்றார் உறவினரும் சொத்தும்கூட அடங்கியுள்ளது என்றும் மேலும் இவர்களின் பினாமி நகைகள் ஆடம்பர கார்கள் மற்றும் கருப்பு பணம் வாட்ச் போன்றவை கணக்கில் கொண்டுவரப்படவில்லை என்றும் வீடியோவில் தெள்ளத் தெளிவாக இருந்தது. இந்த வீடியோ காரணமாக தேசிய அளவில் திமுகவிற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது என்றே கூறப்பட்டது.
இந்த நிலையில் பாஜகவின் ஆலோசனை கூட்டம் கடந்த செவ்வாய் கிழமையன்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, கட்சியின் தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி மற்றும் கட்சியின் மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில் பா.ஜ.க கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சியில் உள்ள பிரச்சனைகளை மையமாக கொண்டு போராட்டம் நடக்க உள்ளதாக தெரிவித்தார்.
அண்ணாமலை என் மண் என் மக்கள் என்னும் தலைப்பில் தனது பயணத்தை தொடங்க உள்ள நிலையில் .மேலும் இந்த நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி,மற்றும் தென்காசி என ஒவ்வொரு மாவட்டம் ரீதியாக நடைபெறும் எனவும் கிராமம் மற்றும் நகரம் என தனித்தனியே இந்த பயணம் தொடரும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் 2 என்ற டி எம் கே வின் இரண்டாம் சொத்து பட்டியலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நடை பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியை விசாரித்த போது அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் தேசிய அளவில் ஊடகங்களின் கவனம் அண்ணாமலையின் மீது திரும்பும் என்றும் தேசிய அளவில் திமுகவின் சொத்து பட்டியல் டிரண்டாகும் என்பதே பாஜகவின் திட்டம் என்றே கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் சரத்பவர் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அடுத்தபடியாக பிகாரில் என்ன நடக்குமோ என்று நிதீஷ் குமார் பயப்படும் நிலையில் தேசிய அளவில் தி.மு.கவின் பைல்ஸ் வெளியிடப்படுவது தி.மு.கவிற்கு ஆபத்தானது . இதுவே பா.ஜ.காவின் பிளான் என்றும் பேசப்படுகிறது.மேலும் டிஎம்கே பைல்ஸ் டூ வில் என்னென்ன ரகசியங்கள் வெளிவரப் போகிறது என்ற பயத்துடன் திமுகவினர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.