24 special

நோ சொன்ன அமித் ஷா! கவலையில் எடப்பாடி

AMITSHAH , EDAPADI
AMITSHAH , EDAPADI

தமிழ்நாட்டில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தேர்தலை எதிர்கொண்டது. இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இதே கூட்டணி நிகழும் என்று எண்ணப்பட்டது ஆனால் அதற்கிடையில் 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்கப்பட்டார். அதற்குப் பிறகு தமிழகத்தில் பாஜகவின் நிலைமை சற்று  உயர ஆரம்பித்துக் கொண்டே இருந்தது. மேலும் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை அரசியல் களத்தை எப்பொழுதுமே பரபரப்பாக இருக்க வைத்தார், மேலும் அவரை நேர்த்தியான பேச்சு மற்றும் அவர் நன்கு படித்து ஐபிஎஸ் ஆக இருந்துள்ளார் என்ற அவரின் பின்புலமும் மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனால் அதிக பொது மக்களை அண்ணாமலையின் பேச்சை கேட்க ஆரம்பித்தார்கள்.


அதுமட்டுமின்றி அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்தது இதற்கிடையிலே அதிமுக மற்றும் பாஜக இருவருக்கும் இடையே சிறு உரசல்கள் இருந்து வந்தது, அதோடு பாஜக தலைமை அதிமுக கூட்டணியில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு 20/20 என்ற அடைமொழியை மையமாக வைத்து தொகுதிகளை கேட்டது ஆனால் அதற்கு அதிமுக சம்மதம் தெரிவிக்கவில்லை! அது மட்டுமின்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை த்தில் பாஜக தனித்து போட்டி வெற்றியை பெறும் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்ததும், அதிமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது இதனை அடுத்து அதிமுக பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக பொது மேடையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிவித்தது. இதனை அடுத்து இந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளுமே தற்போது தனித்தனியாக கூட்டணி அமைத்து பற்றி குறித்த பேச்சு வார்த்தைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இப்படி அதிமுக பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகியதால் திமுகவின் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவின் இணையும் அதனால் நாமும் வலுப்பெற்று இந்த முறை ஆட்சியைப் பெற்று விடலாம் என்ற ஆசையில் இருந்த திமுகவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் தமிழக முழுவதும் அதிமுக பெற்றுள்ள செல்வாக்கு அனைத்துமே தற்போது காணாமல் போய்விட்டது ஆனால் பாஜகவோ தனது செல்வாக்கின் மேலும் உயர்த்தி ஒரு நிலையான இடத்தை பெற்றுள்ளது. இதனால் அதிமுக என்ன செய்வதென்று தெரியாமல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஆனால் தற்போது வரையிலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது அதிமுகவும் என்று குழப்பம் ஏற்படும் வகையில் அதிமுக எந்த விதமான தீவிரப் போராட்டங்களை மேற்கொள்ளாமல் உள்ளது ஆனால் பாஜகவும் அதற்கு மாறாக அதிரடியான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது. 

இதனை அடுத்து அதிமுகவிற்கு தற்போது அதன் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி நாலா பக்கமும் அதிமுகவுக்கு பின்னடைவான சூழ்நிலைகள் ஏற்பட்டு வருவதால் ஒரு அதிரடியான நடவடிக்கையும் கூட்டணி முயற்சியை நாம் மேற்கொண்டு ஆக வேண்டும் என்று சிந்தித்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளார், ஆனால் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அப்பாயின்மென்ட் இல்லை என்று மருத்துவர்கள் தற்போது இணையங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தேர்தல்  தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை ஏற்றுக் கொண்டு கூட்டணியை முறிக்காமல் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா இப்படி அனைத்தையும் இழந்து விட்டு தற்போது வந்து கூட்டணி என்ற பேச்சு வார்த்தையை கேட்பதற்காகவே இவர் வந்திருப்பார் அதனை அறிந்த உள்துறை அமைச்சர் இப்படி அவரது அப்பாயின்மெண்டை மறுத்து இருப்பார் என்ற விமர்சனங்களும் தற்போது இணையங்களில் உலா வருகிறது..