24 special

ராஜினாமா செய்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்! வேற லெவல் தகவல்...

thamilisai soudharajan
thamilisai soudharajan

2006, 2011 மற்றும் 2016 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராகவும் செயல்பட்டவர். அதோடு 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டார் இருப்பினும் அந்த தேர்தலில் கனிமொழியே வெற்றி பெற்றார். இதனை அடுத்து 2019-ல் தெலுங்கானாவின் ஆளுநராகவும் 2021ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற  கூடுதல் பொறுப்பையும் பெற்று இரண்டு மாநிலங்களையும் நிர்வகித்து வந்தார். ஆனால் அரசியல் வட்டாரங்களில் தமிழிசை சௌந்தரராஜன் இனி தீவிர அரசியலில் ஈடுபடவே போவதில்லை அவர் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்ற காரணத்தினாலுதான் பாஜக தலைமையே அவரை ஆளுநராக நியமித்து விட்டது இதற்கு பிறகு அவரை தீவிர அரசியலில் பாஜக தலைமையும் ஈடுபடுத்தாது அவரும் ஈடுபட மாட்டார் என்ற வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.


இருப்பினும் அதனை கண்டு கொள்ளாமல் ஒரு ஆளுநராக தெலுங்கானா மற்றும் புதுவையில் தனது சிறப்பான பங்கை ஆற்றி வந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். மேலும் தமிழகத்திற்கும் தமிழக ஆளுநருக்கு இடையில் பல வகையில் உரசல்கள் ஏற்பட்ட பொழுதும் ஒரு ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இனி தமிழிசை சௌந்தரராஜன் தீவிர அரசியல் பக்கமே தலைவைத்து பார்க்க மாட்டார் என்று கூறப்பட்டு வந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார், அதற்கேற்ற வகையில் தான் வகித்திருந்த இரண்டு பதவிகளையும் தற்போது ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அதாவது தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் என்ற பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு இன்று கடிதம் அனுப்பி உள்ளார். 

ஏற்கனவே தமிழிசை இனி தீவிர அரசியல் பக்கம் திரும்ப மாட்டார் பாஜக தலைமையும் அவரை தீவிர அரசியலில் ஈடுபடுத்தாது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது, அதோடு 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புகளும் சமீபத்தில் வெளியானது இதனை அடுத்து பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தீவிரமாக தயாராகி வருகிறது தேர்தல் பிரச்சாரங்களும் முழு மூச்சில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜனும் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழிசை சௌந்தரராஜன் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தெலுங்கானா மற்றும் புதுவையின் ஆளுநராக இரண்டு மாநிலங்களை ஒரே சமயத்தில் நிர்வாகித்து வந்துள்ளார் என்பதாலும் தமிழிசை சௌந்தரராஜன் முன்பை விட தற்போது அதிக ஆளுமை திறன்களை தன்னிடம் கொண்டுள்ளார் அதனால் லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தமிழக பாஜகவிற்கு ஆதரவான வாக்குகளை சேகரிக்கும் தீவிர பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதுமட்டுமின்றி இதுகுறித்து தமிழிசை தரப்பிடம் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்பது குறித்து கேட்ட பொழுது தமிழிசை சௌந்தரராஜனும் சம்மதம் தெரிவித்து, வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலான தீவிர முயற்சியில் முழுமையாக ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அவர் பதவி வகித்திருந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தமிழிசை சௌந்தரராஜனை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதோடு தனது ஒட்டுமொத்த முயற்சியையும் இதில் செலுத்தி தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி பெற்றால் நிச்சயம் அவர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தமிழிசை சௌந்தரராஜனும் தனது முழு பலத்தை இந்த லோக் சபா தேர்தலில் செலுத்த உள்ளார், இப்படி திமுக போன்ற எதிர்க்கட்சிகளால் தமிழிசை சௌந்தர்ராஜன் புறக்கணிக்கப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டதற்கு டுவிஸ்டாக தமிழக அரசியலுக்கு அவர் மீண்டு வந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒரு பக்கம் அண்ணாமலை மறுபக்கம் வேட்பாளர்கள் தேர்வு என தீவிரமாக பாஜக தேர்தலில் இறங்கி உள்ளதால் இறுதியில் மிகப்பெரிய வெற்றி பாஜகவிற்கு வரும் என்று கூறப்படுகிறது..