24 special

அண்ணாமலைக்கு அமிட்ஷா கூறிய யுக்திகள்...!இனி என நடக்கப்போகிறது அரசியல் களத்தில்

Annamalai,amitsha
Annamalai,amitsha

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாஜக தனது ஒன்பது ஆண்டு காலத்தை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடிஎடுத்து வைக்க உள்ளதால் அதனை கொண்டாடும் விதமாக பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் அமைத்து மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை பாஜகவினர் பரப்புரை செய்து வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த கந்தனேரியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னைக்கு சனிக்கிழமை இரவே வந்தடைந்தார். மேலும் இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பற்றிய களப்பணிகளை எடுத்துக் கூறிய பிறகு தென் சென்னை கோவிலம்பாக்கத்தில் லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா விமானத்தின் மூலம் சென்னையில்  வந்து இறங்கிய பொழுது பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சூழ்ந்திருந்த பாஜக நிர்வாகிகளை பார்த்து கையசைத்த வண்ணம் வந்து கொண்டிருந்தார் அமித்ஷா, அந்த நேரத்தில் திடீரென அமித்ஷா வந்து கொண்டிருந்த பாதையில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பாஜகவினர் கடுமையாக கோபம் அடைந்து கொந்தளித்தனர் இது திமுகவின் காழ்ப்புணர்ச்சி  காரணமாகவே நடந்துள்ளது என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் இந்த திடீர் மின்சார தடைக்கு தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பெரிது படுத்தாமல் சாதாரணமாக கடந்து சென்றார் அதாவது நம்முடைய அரசு மற்றும் அரசு துறை இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டுள்ளது,  ஒரு மிகப்பெரிய தலைவர் வரும்பொழுது அவ்வளவு எளிதாக யாரும் இருக்க மாட்டார்கள் மிக நேர்த்தியாக செயல்பட வேண்டும் என்று தான் அரசு நினைத்திருக்கும், நம்மையும் தாண்டி சில நேரங்களில் சில தவறுகள் நடக்கும் அது மாதிரியே இந்த பவர் கட் நடந்துள்ளது எல்லாவற்றையும் அரசியலாக மாற்ற வேண்டாம் இதனால் இந்த சம்பவத்தை வைத்து பாஜக தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது பதில்களை அளித்தார். 

பின்னர் வேலூரில் நடைபெறும் கூட்டத்திற்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணமானார். ஹெலிகாப்டரில் ஏற சென்ற பொழுது அண்ணாமலையை திடீரென அழைத்த அமித்ஷா ஹெலிகாப்டரில் ஏறுங்க என்றார்! பின்னர் அண்ணாமலையுடன் ஹெலிகாப்டரில் வேலூர் செல்லும் வரை தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? என்னவெல்லாம் செய்திகள்? எதிர்க்கட்சிகள் எப்படி அரசியல் செய்கின்றனர்? கூட்டணி கட்சிகள் எந்த மாதிரி எல்லாம் ஒத்துழைப்பு தருகின்றன என்பதைப் போன்ற விவரங்கள் எல்லாம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஹெலிகாப்டர் பயணத்தின் போது அண்ணாமலையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு சில யுக்திகளை கொடுத்ததாகவும், அந்த யுக்திகளை வைத்து அடுத்து வரப்போகும் காலங்களில்  அதிரடி அரசியலில் அண்ணாமலை இறங்கப் போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

மேலும் அமித்ஷா அண்ணாமலையிடம் 'தைரியமாக அடித்து ஆடு! என்ன நடந்தாலும் சரி பார்த்துக் கொள்கிறேன் என  இந்த ஹெலிகாப்டர் பயணத்தில் அண்ணாமலைக்கு முழு சுதந்திரத்தை அளிப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தான் வேலூர் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பாஜகவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றுள்ளார் என அமித்ஷா பாராட்டியது. இப்படி அண்ணாமலைக்கு அமித்ஷா கொடுத்த ஊக்கத்தினால் வரும் மாதங்களில் அண்ணாமலை இன்னும் அதிதீவிரமாக செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன