24 special

திமுகவை அலற விட்ட அண்ணாமலை...!சிறப்பான பதில் அடி

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

முதல்வர் முக ஸ்டாலின் பாஜகவை நோக்கி பேசியது இன்று அவருக்கே எதிராக திரும்பி இருக்கிறது, பாஜகவில் குழப்பம் உண்டாக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கருத்திற்கு அண்ணாமலை அதே செய்தியாளர்கள் மத்தியில் பதிலடி கொடுக்க தற்போது திமுகவில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.


இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழர்‌ பிரதமர்‌ ஆக வேண்டும்‌ என்கிற அமித்ஷாவின்‌ கருத்து மகிழ்ச்சிதான்‌. அப்படி பார்த்தால் தமிழிசை, எல்‌.முருகன்‌ ஆகியோர்‌ பிரதமர்‌ ஆக வாய்ப்பு உள்ளது.

தமிழர்‌ பிரதமர்‌ ஆவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால்‌ விளக்கம்‌ தரப்படும்‌. அதேநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்‌ அமித்ஷாவின்‌ உள்நோக்கம்‌ என்னவென்று தெரியவில்லை. தமிழரை பிரதமராக்க வேண்டும்‌ என்பதன்‌ மூலம்‌ பிரதமர்‌ மோடி மீது அமித்ஷாவிற்கு என்ன கோபம்‌ என தெரியவில்லை”என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதாவது  வரும் காலங்களில் பிரதமராக தமிழர் வரவேண்டும் என அமிட்ஷா பேசியதை வைத்து பாஜகவிற்குள் குழப்பம் உண்டாகும் விதமாக முதல்வட் ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ள அதே பாணியில் அண்ணாமலையும் அதே செய்தியாளர்கள் மத்தியில் ஒரு புது தகவலை பகிர்ந்தார்.

திமுகவில் பலர் கனிமொழி அவர்களை நோக்கி நகருவதாகவும் திமுகவை உதயநிதி வசம் கொண்டு செல்ல நினைத்த முதல்வர் ஸ்டாலின் கனவிற்கு கனிமொழி பதிலடி கொடுத்து வருவதாக பொருள் படும் படி அண்ணாமலை முதல்வருக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் திமுகவில் அப்படியெல்லாம் ஒரு குழப்பமும் இல்லை என திமுகவினர் பதறிகொண்டு விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்று இருக்கிறது அண்ணாமலையின் கனிமொழி குறித்த பேச்சு.

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்கள் குறித்து பாஜகவில் குழப்பம் உண்டாக்கும் வகையில் ஒரு புயலை உண்டாக்கலாம் என கணக்கு போட்டு பேச, அதே பாணியில் சிம்பிளாக கனிமொழியை நோக்கி திமுக நகருகிறது என பேசி முற்றுப்புள்ளி வைத்து விட்டார் அண்ணாமலை.

திமுக என்ன ஆயுதம் எடுக்கிறதோ அதே ஆயுதத்தை வைத்து அண்ணாமலையும் பதிலடி கொடுத்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதல்வர் ஸ்டாலினுக்கு யார் இது போன்ற யோசனையை கொடுப்பது பாஜகவினர் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்பார்கள் என தெரிந்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு இது போன்ற அறிவுரை கொடுப்பது யார் என உடன்பிறப்புகள் சிலரே புலம்ப தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.