ஒருபக்கம் அமித்ஷா அதிரடி அரசியல், மறுபுறம் அண்ணாமலையின் சூறாவளி அரசியல், இந்தப்பக்கம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை கழுகு போல் கண்காணிப்பு, இந்தப்பக்கம் கேள்வி கேட்கும் மக்கள் என திமுகவை சுற்றி சுழன்றடிக்கும் புயல்களால் மைக் என்றாலே உதயநிதி அலறியடித்து ஓடுகிறார்!
கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு மு க ஸ்டாலின் கட்சியின் தலைவராக மாறினார், தற்போது தமிழக முதல்வராகவும் உள்ளார். இவரை அடுத்து இவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மெல்ல மெல்ல அரசியலில் நுழைந்து இளைஞர் அணி செயலாளராக இருந்து பிறகு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் தற்போது உள்ளார். முதல்வரின் உடல்நிலை காரணமாக முதல்வர் செல்ல இருக்கும் சில இடங்களுக்கு தற்போது உதயநிதி சென்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதன்படியே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி தமிழக மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வருவதில் சற்று ஆர்வம் காட்டாமல் இருந்ததால் தமிழக மாணவர்கள் தற்போது மிகப்பெரிய பொன்னான வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் யாரும் கலந்து கொள்ளாததை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 5-ம் தேதி அன்றே பதிவிட்டு நினைவூட்டினார்.
அதன் பிறகும் கண்டுகொள்ளாமல் இருந்த திமுக, செய்தியாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பிய பிறகே அதற்கான பதிலை கொடுத்துள்ளனர். அதாவது தேசிய விளையாட்டு போட்டிகள் கொரோனா காலங்களுக்கு பிறகு தற்போது தான் நடைபெற்றது. அந்த போட்டிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் ஆனால் முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தினாலே தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்களை பங்கேற்க வைக்க முடியவில்லை இந்த தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷும் அதிகாரிகள் தகவல்களை சரியாக பராமரித்துக் கொள்ளாத காரணத்தினாலேயே இந்த தவறு நிகழ்ந்துள்ளது, இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் மேல் பழியை போட்டு தப்பித்தார். இந்த இரண்டு அமைச்சர்களின் பதில் மூலம் அவர்கள் தமிழக மாணவர்கள் மீது கொண்டுள்ள அலட்சியத்தை காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியதுடன் தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்னை விட்டால் போதும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. முன்னணி ஆங்கில ஊடகத்தின் பத்திரிக்கையாளர் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதே அதில் திமுக சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் உதயநிதி பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் நடைபெறும் எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பது என்பது ஒரு முக்கியமானது இதனைப் பற்றி முதல்வரே விளக்குவார் என்று ஆங்கிலத்தில் பதில் அளித்துவிட்டு விரைந்து தேங்க்யூ என்று கூறிய வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவியது.
ஏற்கனவே தமிழக மாணவர்களை தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வைக்க முடியாமல் அதற்கான பழியை அதிகாரிகள் மேல் தூக்கிப் போட்டோம் தற்போது இந்த கேள்வி கேட்டு நாம் ஏதும் உளறி பின்னால் தந்தையிடமே திட்டு வாங்கி விடக்கூடாது என்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேகமாக தனது உரையை ஆங்கிலத்தில் முடித்திருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.