அஸ்ஸாம் : அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபியின் ஓராண்டு நிறைவையொட்டி மாநில பிஜேபி மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் மங்காச்சார் உள்ளிட்ட சில இடங்களில் பேரணி நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் பயணமாக அஸ்ஸாம் வந்தடைந்தார்.
கௌஹாத்தி வந்தடைந்த அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் நிலச்சால் மலையில் உள்ள புகழ்பெற்ற பழமையான காமாக்யா அம்மனை தரிசித்தார். பின்னர்நேற்று மங்காச்சார் வந்தடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷா மங்காச்சார் செக்டரில் இருக்கும் அஸ்ஸாம் வங்காள தேச எல்லையில் நிலைமையை ஆய்வு செய்தார்.
அவரை எல்லைப்புற காவல்நிலையத்தில் பி.எஸ்.எப் ஜவான்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து எல்லைப்பகுதியை பார்வையிட்டார். ஜவான்களுடன் உரையாற்றிய அவர் உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடினார். அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். மேலும் ஜவான்களுடன் பேசிய அமைச்சர் எல்லைப்பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டி ஊடுருவும் ஊடுருவல்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தினார். இதுகுறித்து துணை ராணுவப்படை வட்டாரங்கள் கூறுகையில் "ஊடுருவல் மாடு கடத்தல், எல்லை வேலி மற்றும் ஆற்றில் ரோந்துப்பணி போன்ற பிரச்சினைகள் குறித்து BSF அதிகாரிகளுடன் சதர்தில்லா முகாமில் கலந்துரையாடவிருக்கிறார்" என தெரிவித்துள்ளன.
துணை ராணுவப்படைக்கு BSF சென்ட்ரல் ஸ்டார் மற்றும் ஒர்க்க்ஷாப் திறந்து வைத்த அமைச்சர் ஜவான்களின் அர்ப்பணிப்பு தியாகம் கடமை குறித்து மனமார பாராட்டினார். அதைத்தொடர்ந்து இன்று கமரூப் மாவட்டத்தில் அமிங்கினான் பகுதியில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் அமைச்சர் அமித்ஷா நாளை நடைபெறும் பேரணியில் மக்கள் மத்தியில் உரையாட உள்ளார்.
அஸ்ஸாம் எல்லையில் ஊடுருவும் பங்காளதேசிகளால் அஸ்ஸாம் பழங்குடியினர் பெருமளவில் பாதிக்கப்படுவதை தொடர்ந்து CAA மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து மக்களிடம்பேசுவார் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநில முதல்வர் ஹிமந்தா இந்த குடியுரிமை சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனகூறியிருந்தது குறிப்பிடத்தக்க