Cinema

அண்ணாமலை கேட்ட அதே கேள்வியை அதே நிருபரை நோக்கி கேட்ட மதுரை ஆதினம் !

Madurai aadhinam
Madurai aadhinam

திரும்ப திரும்ப கேள்வி கேட்ட நபரை மதுரை ஆதினம் நீங்கள் சன் டிவியா என கேள்வி எழுப்பி மதுரை ஆதினம் கிண்டல் செய்த சம்பவம் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது, மதுரை ஆதினம் அளித்த பேட்டியில் கம்யூனிஸ்ட் கட்சி முதல் வீரமணி வரை ஆதினம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தமிழக ஊடகங்கள் தங்களுக்கு ஏற்றது போன்று செய்தியை கொடுத்துள்ளன.


பட்டணப் பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துகளும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் செய்தியாளர் ஒருவர் நீங்கள் பாஜக,இந்து முன்னணி முகமாக பேசுவதாக கூறப்படுகிறதே என கேட்க அப்படியா அப்படியே வைத்து கொள்ளுங்கள் என பதில் கொடுத்தார், அதன் பிறகு மீண்டும் அதே போன்று கேள்வியை நிருபர் எழுப்ப தம்பி நீங்கள் என்ன சன் டிவி யா என ஆதினம் கேட்க சபையில் சிரிப்பலை உண்டானது.

இதே போன்று சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பிய நிருபரை பார்த்து நீங்கள் சன் டிவி யா என கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் கொடுத்த ஆதினம், கம்யூனிஸ்ட் காரங்க அப்படித்தான் பேசுவான் என பதிலடி கொடுத்தார் மொத்தத்தில் மதுரை ஆதினம் அனைவரையும் வெளுத்து எடுத்துவிட்டார் என்றே கூறலாம்.

ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதை கண்டுகொள்ள போவதில்லை.முந்தைய ஆதீனம் அதிமுக, திமுக ஆட்சிகளின் போது அவைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பது கிடையாது.

ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மிரட்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்து உள்ளார். 

தமிழக அரசு ஆன்மிக அரசா என்பது குறித்து இப்போது நான் கருத்து சொல்ல மாட்டேன்.  ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார். அது குறித்து அரசுக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.

ஏழை, எளியோர் உள்ளிட்ட  அனைத்து மக்களும் முழுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வாங்கும் நடைமுறையை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.