sports

பிஜேபியில் இணையும் பிரபல கிரிக்கட் வீரர்...! யார் தெரியுமா

Ms dhoni, rahul dravid
Ms dhoni, rahul dravid

ஹிமாச்சலப்பிரதேசம் : சமீப வருடங்களாக பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் இளம் அரசியல்வாதிகள் உட்பட பலர் பிஜேபியில் இணைந்து வருகின்றனர். மிக சமீபத்தில் WWE வீரரான காளி பஞ்சாப் பிஜேபியில் இணைந்தார். மேலும் பல நாட்களாக பிரபல கிரிக்கட் வீரர் மஹேந்திர சிங் தோனி பிஜேபியில் இணைய இருக்கிறார் என யூகங்கள் பரவி வந்தன.


இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல் இந்தவருட முடிவில் நடைபெற இருக்கிறது. 2017ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 68 இடங்களில் 44 தொகுதியை பிஜேபி தன்வசப்படுத்தியிருந்தது. இதனிடையே வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு பிஜேபி இளைஞரமைப்பான யுவமோர்ச்சா சார்பில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் பிரபல கிரிக்கட் வீரர் ராகுல் டிராவிட் பங்குகொள்வார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தர்மசாலா தொகுதி பிஜேபி எம்.எல்.ஏ விஷால் நெஹரியா "மே 12 முதல் 15 வரை தர்மசாலாவில் நடைபெற இருக்கும் யுவமோர்ச்சாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிஜேபி தேசிய செயலாளர் ஜேபி.நட்டா மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.  

மூன்று நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெய்ராம் தாகூர் கலந்துகொள்ள இருக்கிறார். 139 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் ராகுல் டிராவிட்டின் வெற்றியின் மூலம் அரசியல் மட்டுமன்றி மற்ற துறைகளிலும் மற்ற துறைகளிலும் இளைஞர்களால் சாதிக்க முடியும் என்ற செய்தி இளைஞர்கள் மத்தியில் கொடுக்கப்படும்" என விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராகுல் டிராவிட் பிஜேபியில் இணையலாம் என்ற யூகம் உறுதியாகியிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த தோனி அங்கு களமிறக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் திடீர் திருப்பமாக ராகுல் இணைவதாக கிளம்பியுள்ள தகவல் அரசியலில் பெரும்பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் ராகுல் டிராவிட் தர்ப்பை தொடர்புகொண்டபோது தர்மசாலாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திய அவர்கள் ராகுலின் அரசியல் பிரவேசம்குறித்து தகவலளிக்க மறுத்துவிட்டனர்.