'தமிழ்நாடு போன கையோட நீங்க இதைத்தான் செய்யணும்' என அமித்ஷா ஆர்டர் போட்டதும் எடப்பாடி பழனிச்சாமி சரி என சொல்லிவிட்டு டெல்லியில் இருந்து திரும்பி உள்ளார்.
தமிழக பாஜக மற்றும் அதிமுக இடையிலான மோதல் அதிகரித்துள்ளது எனவும், அண்ணாமலையின் செயல்பாடுகள் எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை எனவும், பாஜக தனித்துப் போட்டியிடுவது அதிமுகவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனவும், அண்ணாமலையை எடப்பாடி பழனிச்சாமி ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனவும், நாம் டெல்லி மேலிடத்திற்கு பதில் சொன்னால் போதும் அண்ணாமலைக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் அதிமுக தரப்பில் இருந்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் திமுக சொத்து பட்டியலை வெளியிடும் பொழுது அதிமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடுவீர்களா என கேட்டதற்கு 'நான் யாரையும் பாரபட்சம் பார்க்க மாட்டேன் ஊழல் செய்திருந்தால் கண்டிப்பாக தப்ப முடியாது! யாராக இருந்தாலும் சொத்து பட்டியல் வெளியிடப்படும்' என சூசகமாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் அண்ணாமலையை பற்றி கேட்டதற்கு 'முதிர்ந்த அரசியல்வாதிகளை பற்றி கேளுங்கள், செய்திகளில் அடிபட்டு பெயர் வாங்க வேண்டும்' என நினைக்கும் அரசியல்வாதிகளை பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என அண்ணாமலை மீது வேண்டா வெறுப்பாக பதில் கூறினார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அதிமுக -பாஜக கூட்டணி அவ்வளவுதான் முடிந்து விட்டது! எடப்பாடி தனது ஆளுமையை நிரூபித்து விட்டார்! என்ன இருந்தாலும் திராவிட பின்புலத்திலிருந்து வந்த கட்சி தானே கட்சி அதிமுக! என்றெல்லாம் புகழ் பாடி வந்தனர் இந்த நிலையில் கர்நாடகா தேர்தல் மேற்பார்வையாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். உடனே அண்ணாமலையை ஒதுக்குவதற்காக தான் பாஜக மேலிடம் இதனை செய்து விட்டது, அண்ணாமலையை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே கர்நாடகத்திற்கு அனுப்பி உள்ளது என்றெல்லாம் கூறி பல விஷயங்களை தமிழக அரசியலில் பரப்பி வந்தனர்.
இந்தநிலையில் அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோரும் சென்றனர்.
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக தலைவர் அண்ணாமலை உடனிருந்தனர்.
இந்த சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா எடப்பாடி பழனிசாமி குழுவினரிடம் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக-அதிமுக கூட்டணியை வலுப்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு, தேமுதிக, பாமக கட்சிகளின் தற்போதைய பலம், திமுக கூட்டணிக் கட்சிகளின் பலம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவுக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் வார்த்தைப் போர் நடைபெற்று வந்ததை அறிந்திருக்கும் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து மோதல்கள் மற்றும் எதிர் விமர்சனங்களை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி'யிடம் அமித்ஷா, 'நீங்கள் தமிழகம் திரும்பியதும் முதற்கட்டமாக பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற லிஸ்ட்டை எனக்கு உடனே அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
அதன் காரணமாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் திரும்பியவுடன் முதல் வேலையாக அதிமுகவுக்கு பாஜக போட்டியிடும் தொகுதிகளை பிரித்து அமித்ஷாவிற்கு தனியாக அனுப்புவதற்காக அவசர அவசரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார் எனும் தகவல்கள் கிடைத்துள்ளது
அதுமட்டுமில்லாமல் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது நாங்கள் கூட்டணியில் தான் உள்ளோம் என பல்டி அடிக்கும் விதமாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.