தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை சொன்னதைப் போலவே திமுகவின் சொத்து ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் பட்டியல் மற்றும் ஸ்டாலினின் இருநூறு கோடி ரூபாய் ஊழல் பட்டியல் என DMK Files 1 என்று வெளியிட்டு பிறகு திமுகவிற்கு மேலும் அடி மேல் அடியாக, இடி மேல் இடியாக.... அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக திமுகவின் முக்கிய பிரமுகராகவும், நிதி அமைச்சராகவும் திகழும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய திமுக குடும்ப அரசியல், முதல்வர் ஸ்டாலின், மகன் உதயநிதி மற்றும் ஸ்டாலின் மருமகனான சபரீசன் ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது பற்றி ஆடியோ வெளியிட்டு தமிழக அரசியலில் வட்டாரத்தில் சலசலப்பையும் , அரசியல் விமர்சகர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில்
டிஎம்கே பைல்ஸ் ஒன்று, இரண்டு என்று வரிசையாக பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் மேலும் அது பற்றி விசாரிக்க அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக ஆளுநரிடம் என புகாரும் கொடுத்து அண்ணாமலை ஆடும் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்
திமுகவை நிலைகுலைய செய்யும் அண்ணாமலையின் ஆட்டத்திற்கு முன்னால் செய்வதறியாது நிலை குலைந்து இருக்கும் திமுக சட்டசபையிலும் தடுமாறுகிறதோ என்று என்னும் வகையில்
கடந்த வாரம் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் நிறைவேற்றியதும் , மேலும் பொது இடங்களான திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று உபயோகிக்கலாம் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டதும் , பிறகு அவசரம் அவசரமாக 12 மணி நேர வேலை திட்டத்தையும், டாஸ்மாக் அமைச்சரான அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக தமிழக அரசே வெளியிட்ட அரசாணைக்கு எதிராக திருமண மண்டபங்களில் அனுமதிக்கப்படாது என்று கூற வைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாற்றி அண்ணாமலையின் செய்திகளை மக்கள் முன் மாற்றி விடலாம் என்ற கணக்கு பூமராங் போல திமுகவையே பதம் பார்த்தது, திமுக அரசு மற்றும் திமுகவினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்றால் மிகை ஆகாது.
இப்படி திமுக அரசு அறிவித்த 12 மணி நேர வேலை நீடிப்பு மசோதா மற்றும் திருமண மண்டபம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது உபயோகிப்பது தொடர்பாக எதிர்ப்புகள் வரும் என தெரிந்தே திமுக இதனை வெளியிட்டு இருப்பதாகவும் இதன் பின்னணியில் வேறு சில திட்டங்களும் இருக்கின்றன எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா , '150 ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற உரிமை எட்டு மணி நேர வேலை. 12 மணி நேர வேலை மசோதா மனிதகுலத்துக்கு விரோதமானது எனப் பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டிய பின்னர்தான், ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தெரியவந்ததா..? தி.மு.க-வினரின் சொத்து விவகார சர்ச்சை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் உள்ளிட்டவற்றை மறைக்கவே 12 மணி நேர வேலை மசோதாவையும், மதுபான சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருக்கின்றனர். திட்டங்களை அறிவித்துவிட்டு திரும்பப் பெறுவதன் மூலம் ஏற்படும் அவமானங்களைக்கூட சகித்துக்கொள்ளலாம்... ஆனால், ஊழல்களும் திருட்டுகளும் மறைக்கப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள் தி.மு.க-வினர்' என்றார்.
மேலும் அரசியல் பார்வையாளரான ஜெகதீஸ்வரன், 'தமிழக அரசு அறிவித்து பின்வாங்கிய 12 மணி நேர வேலை, மதுபான சர்ச்சைக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பது தி.மு.க-வுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவர்கள் இரண்டு விவகாரங்களையும் துணிச்சலுடன் அறிவித்தனர். அரசியல் கட்சிகள், மக்கள், ஊடகங்கள் என அனைவரும் இவற்றைச் சுற்றியே பேசுவார்கள்... இதன் மூலம் பி.டி.ஆர் ஆடியோ சர்ச்சைக்கும், அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் தொடர்பான விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதே தி.மு.க-வின் பிளான்" என்றார்.
இப்படி எதிர்ப்புகள் வரும் என்றும், கூட்டணி கட்சிகள் முதற்கொண்டு நம்மை எதிர்த்து நிற்கும் என்றும், அனைத்து கட்சிகளும் இந்த 12 மணி நேர வேலை சட்டத்தைப் பற்றி பேசும் அதே சமயத்தில் அண்ணாமலையின் திமுக மீதான சொத்துக்குவிப்பு புகார் மற்றும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ பற்றிய சர்ச்சை மறந்து விடும் எனவும் இது நமக்கு சாதகமாக அமையும் மசோதாவை முதலில் அறிவித்துவிட்டு பின்னர் வாங்கினால் மக்கள் கருத்தை கேட்கிறார்கள் என்ற பெயரும் நமக்கு கிடைக்கும் என அரசியல் கணக்குகளை போட்ட திமுக தற்பொழுது காய்களை நகர்த்தி இதை வேண்டுமென்றே செய்தது இதன் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.
இருப்பினும் இந்த 12 மணி நேர வேலை திட்டம் திமுகவிற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பை தான் சம்பாதித்து கொடுத்ததே தவிர இந்த ரைடு மற்றும் ஆடியோ டேப் விவகாரத்தை மடை மாற்றவில்லை என தெரிந்து திமுக தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. இப்படி போட்ட திட்டங்கள் அனைத்தும் வீணாகி விட்டனவே என்ற அதிர்ச்சி நிலையில்தான் அடுத்த முயற்சியாக டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திப்பதும், அமைச்சு அமைச்சரவை மாற்றம் என செய்திகள் மூலமாக தமிழக அரசியல் அனல் காற்றை மாற்ற பார்க்கின்றனர் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கையில் சுற்றும் கிருஷ்ணனின் சுதர்சன சக்கரத்தில் தப்பிப்பாரா ஸ்டாலின் என்பதே தற்பொழுது தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர் மத்தியிலும், ஊடகங்கள் பத்திரிகையிலும் இப்போதைய பேசும் பொருளாக உள்ளது.