2024 ஆம் ஆண்டு தேர்தலில் மறுபடியும் பிரதமர் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கபட கூடாது என்பதற்காகவும் பாஜக ஆட்சியைப் பிடிக்கவே கூடாது என்பதற்காகவும் அனைத்து மாநில அளவிலான எதிர்கட்சிகளும் தேசிய அளவில் கூட்டணியாக இணைந்து எதிர்க்கட்சி கூட்டணி மாநாடு என்ற கூட்டத்தையும் கடந்த வாரத்தில் பாட்னாவில் நடத்தி முடித்தனர்.
இக்கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுனா கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால் உள்ளிட்ட 17 கட்சிகளுடன் மொத்தம் 32 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பாஜகவிற்கு எதிராக போட்டியிடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் முறையான மற்றும் உறுதியான எந்த ஒரு தீர்வையும் முடிவையும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எடுக்கவில்லை என்றாலும் இதன் இரண்டாவது கூட்டம் ஜூலை 13 அல்லது 14 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
பாட்னா கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டாலும் பெரும் ஈடுபாடு இல்லாத வகையிலே அவர் இருந்துள்ளார் எனவும் அதன் காரணமாகவே கூட்டம் முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கலந்துகொள்ளாமல் வந்துவிட்டார் எனவும் தகவல்கள் கிடைத்தன! அதோடு திமுக எடுக்கும் ஒவ்வொரு நகர்வுகளையும் முடிவுகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்காணித்து வருவதாகவும் ஒரு செய்திகள் வெளியாகியது.
அதாவது அறிவாலய வட்டாரங்களையும் சேர்த்து தேசிய அளவில் எத்தனை பெரிய எதிர்க்கட்சி கூட்டணியாக ஒன்றிணைந்து கூட்டம் நடத்தினாலும் அதனையும் அமித்ஷா கண்காணித்து வருவதாகவும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு முடிவுகளும் உடனுக்குடன் அமித் ஷா அலுவலகத்திற்கு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொரு மாநில கட்சிகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அமித் ஷா கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
அதற்காக தனி ஆட்களையும் அவர் நியமித்துள்ளதாகவும் ஒவ்வொரு கட்சியிலும் என்னென்ன உட்கட்சி பூசல் இருக்கிறது என்பதை பற்றியும், என்னென்ன பிரச்சனை எழுகிறது அந்த பிரச்சினைகளை யார் சரி செய்கிறார்கள் என்ற அனைத்து தகவலும் பாஜகவின் முக்கிய நிர்வாகியாகவும் உள் துறை அமைச்சராகவும் உள்ள அமித் ஷாவிற்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அறிவாலயத்தில் தனது பார்வையை செலுத்தி இருக்கும் அமித்ஷா அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பற்றி தற்போது பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த ஆலோசனை மேற்கொள்கின்றனர் ஆனால் உண்மையில் அவர்கள் வாரிசு அரசியலையே வளர்க்க முற்படுகின்றனர். சோனியாவின் வாழ்க்கை லட்சியம் ராகுலை பிரதமராக்குவது. லாலு தனது மகன் தேஜஸ்வியை பிரதமராக்க முற்படுகிறார்.
மம்தா அவரது அண்ணன் மகன் அபிஷேக்கை முதல்வராக்க நினைக்கிறார். கெலாட் அவரது மகனான வைபவை முதல்வராக்க முயற்சிக்கிறார் இவர்களைப் போன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் தனது மகன் உதயநிதியை முதல்வராக்க ஆர்வமாக உள்ளார். இப்படிப்பட்டவர்களால் உங்களுக்கு நல்லது செய்ய முடியுமா என்பதை சிந்தித்துப் பாருங்கள் என்று அமித் ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் உதயநிதி ஸ்டாலினை இதுவரையில் குறிப்பிடாமல் இருந்த அமித் ஷா முதல்முறையாக தற்போது குறிப்பிட்டு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அறிவாலயத்தில் என்ன நடக்கிறது என உள்துறை அமைச்சகம் கவனித்து வரும் காரத்தினாலும் இது அறிவாலயத் தரப்பிற்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.