மேற்குவங்கம் : கொல்கொத்தாவிலுள்ள சித்புர் காசிப்பூர் பகுதியில் பிஜேபி தொண்டர் ஒருவர் நேற்று காலை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் உள்துறை அமைச்சர் அமிட்ஷா பாஜக வன்முறைகயில் ஈடுபாடு இல்லை அதே நேரத்தில் வன்முறையில் நம்பிக்கை இல்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது அரசியல் கொலை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நேற்று காலை சித்புர் காசிப்பூர் பகுதியில் பாழடைந்த கட்டிடத்தின் கூரையில் ஒரு இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரணையில் அவர் பெயர் அர்ஜுன் சௌராசியா என்பதும் அவர் உள்ளூர் பிஜேபி தொண்டர் எனவும் அடையாளம் காணப்பட்டது.
இதனிடையே மேற்குவங்கத்தில் பிஜேபி சார்பில் நடைபெறும் இருசக்கர வாகன பேரணிக்கு தலைமை தாங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில் " திரிணாமூல் அரசின் ஓராண்டு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது. ஆனால் அரசியல் கொலைகள் தொடங்கியுள்ளன. அர்ஜுன் சௌராசியா கொலைக்கு பிஜேபி கண்டனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை நான் நேரடியாக சென்று சந்தித்தேன்.அவருடைய பாட்டியும் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடவேண்டும் என பிஜேபி வலியுறுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து கவனத்தில்கொண்டு மேற்குவங்க அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் அச்ச சூழலை உருவாக்க முயற்சி நடக்கிறது. மாநிலத்தில் வன்முறை மற்றும் கொலைகளை பயன்படுத்தி அச்சத்தை தூண்டவும் எதிர்கட்சிகளை மௌனமாக்கவும் முயற்சி நடக்கிறது. இது ஒரு அப்பட்டமான சதி. வன்முறை அரசியலில் பிஜேபிக்கு நம்பிக்கை இல்லை. அதேபோல வன்முறை அரசியலுக்கு பிஜேபி அஞ்சுவதில்லை.
உயர்நீதிமன்ற அனுமதியுடன் மேற்குவங்கத்தை போல வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நீதிமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது" என மமதா அரசை அமித்சா கடுமையாக சாடினார்.