24 special

ரகசியத்தை உடைத்த அம்மு அபிராமி...... இந்த செலிபிரிட்டிதான் இவங்க லவ்வரா....?

Ammu Abhirami
Ammu Abhirami

திரை பிரபலங்கள் இருவருக்கு இடையே மலருகின்ற காதலை ரொம்ப காலத்துக்கு பூட்டி வைக்கவே முடியாது அதுவும் அவர்களின் ரசிகர் களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் மறைச்சு வைக்கவே முடியாது, ஈசியா நியூஸ் எல்லாம் வெளிய வந்து பரவி அந்த இரண்டு பிரபலத்துக்கே அதிர்ச்சியை கொடுத்துவிடும்! இல்லை எனில் பெரும் தலைவலியை கொடுத்துவிடும்! அப்படித்தான் இப்போ திரை உலக இந்நாள் வரைக்கும் ஒரு கிசுகிசுப்பாவே இருந்து வந்த செய்தியை அதன் நடிகை கன்ஃபார்ம் பண்ணி இருக்காங்க, யார் அந்த நடிகை, யாரை காதலிக்கிறாங்க, எப்படி கன்ஃபார்ம் பண்ணாங்க என அனைத்தையும் இப்ப பார்க்கலாம்.... 


தென்னிந்திய நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் அம்மு அபிராமி. இவர் முதலில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தின் கூட்டத்தில் ஒரு பெண்ணாக நடித்து திரை உலகில் அறிமுகமானார். அதற்குப் பிறகு அவர் தேர்வு செய்த கதை பாத்திரங்கள் அனைத்துமே தன்னை மக்கள் மத்தியில் முன்னிறுத்தும் கதாபாத்திரங்களாக இருந்தது. அதாவது பைரவா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக்கு நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்திக்கின் சகோதரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதற்கு அடுத்ததாக, ராட்சசன் திரைப்படத்தில் ஒரு பள்ளி மாணவியாகவும் விஷ்ணு விஷாலின் அக்கா பொண்ணாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் கண்டார். மேலும் இந்த திரைப்படம் அம்மு அபிராமியை பட்டித் தொட்டி எங்கும் கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து அசுரன் திரைப்படத்தில் தனுஷின் முன்னாள் காதலியாக நடித்து மிகவும் பிரபலமானார். அதோடு அப்படத்தில் கத்தரிப்பூவழகி என்ற பாடலும் இவருக்கென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் தன் கதைக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வந்த அம்மு அபிராமி தற்போது சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் அப்படி இவர் நடித்த ஹாட்ஸ்பாட், கண்ணகி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இது மட்டும் இன்றி சின்னதுரையில் மிக முக்கிய ஷோவாகவும் பல ரசிகர்களைக் கொண்ட ஷோவாகவும் உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இன்னும் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றார். 

அதே சமயத்தில் அந்த நிகழ்ச்சியின் மூலம் தன் காதலரையும் கண்டுபிடித்துள்ளார் அம்மு அபிராமி. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனரான பார்த்திபன் மணியை இவர் காதலிப்பதாக ஏற்கனவே பல கிசுகிசுக்கள் எழுந்து வந்தது. ஏனென்றால் அம்முவின் பிறந்தநாள் அன்று கார்த்திக்குடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ஒரு கேப்டனையும் போட்டு இருப்பார். அதன் மூலம் குக் வித் கோமாளியின் சக நடிகர்கள் பலவாறு கிண்டல் செய்து பதிவுகளை இட்டிருந்தனர். இதனால் கார்த்திக்கும் அம்மு அபிராமியும் காதலிப்பதாக பல பேச்சுக்கள் உலா வந்தது. இந்த நிலையில் இந்த பேச்சை உறுதிப்படுத்தும் வகையில் மணியின் பிறந்தநாள் அன்று, பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியதோடு பிறந்ததற்கு நன்றி, வாழ்க்கையில் வந்ததற்கும் நன்றி என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இதன் மூலம் இதுவரை அம்மு அபிராமி தனது காதலை ரகசியமாக வைத்து வந்த நிலையில் தற்போது வெளிப்படையாக தெரியப்படுத்தியுள்ளார். இதனால் அபிராமியின் பல ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் அம்மு அபிராமி மற்றும் கார்த்திக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.