24 special

கோலாகலமாக நடந்து முடிந்த கல்யாணம்.... திருமணத்திற்கு முன்பாகவே தன் ஆக்சன் கிங் பொண்ணுக்கு தம்பி ராமையா வச்ச செக்!!

Arjum
Arjum

90 களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்தவர்கள் ஏராளமானோர் இருந்தனர். ஆனால் அப்பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து திரைப்படங்களிலும் நடித்து அனைத்து மொழியிலும் தனது வெற்றியை தக்க வைத்தவர்கள் சிலர்! அப்படிப்பட்ட சிலரில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்மையானவராக இருந்தவர். 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தை தொடங்கிய அர்ஜுன் அதற்கு முன்பாகவே கன்னட திரைப்படத்தில் சிறுவேடத்தில் நடித்து திரை உலகில் அறிமுகம் ஆனார். நன்றி திரைப்படம் அர்ஜுனுக்கு நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு அவரை தேடி வந்த படங்கள் அனைத்துமே இரு கதாநாயகர்கள் கொண்ட படமாக இருந்தது. அப்பொழுது தன்னுடைய இயக்கத்தில் சேவகன் என்ற படத்தை இயக்கினார் அர்ஜுன்.  இந்தப் படத்தின் மூலம் தன்னை முன்னிறுத்தும் ஒரு கதையை வெளிப்படுத்தினார். 


இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு,  சேவகன் படத்திற்குப் பிறகு பிரதாப், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி என தொடர்ச்சியாக 12 படங்களை அர்ஜூனையே இயக்க வைத்தது. மேலும் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் நாட்டுப் பற்றியும் அறச்சீற்றத்தையும் கொண்ட பாத்திரங்களாகவே காணப்பட்டது. அதற்குப் பிறகு மாறிவரும் காலத்திற்கேற்ப தனது கதாபாத்திரங்களையும் மாற்றி இன்றளவும் ஒரு முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அர்ஜுன் 90களில் இருந்து இன்று வரை மாறுபட்ட தோற்றத்தில் அடித்து ஒரு முக்கிய இடத்தில் இருப்பதைப் போன்று ஒரு காமெடியனாக அறிமுகமாகி பல கதாபாத்திரங்களை ஏற்று அதை திறம்பட வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் தம்பி ராமையா, இவர் குணச்சித்திர நடிகர் மட்டுமின்றி இயக்குனரும் ஆவார். வடிவேல் நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

இது மட்டுமின்றி பாடல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி திரை உலகின் இரு முக்கிய நடிகர்கள் ஒரு படத்தை இணைந்து பார்த்திருப்போம் ஆனால் தற்பொழுது குடும்பமாகவே இவர்கள் அனைவரும் இணையந்துள்ளனர். அதாவது அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் விஷால் நடித்த பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார். இதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெருமளவிலான படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. அதேபோல தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா அதாங்கப்பட்டது மகாஜனங்களே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு பிறகு மணியார் குடும்பம், திருமணம் மற்றும் தண்ணி வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி ராமையா இருவருக்கும் குடும்பத்தினர் திருமண பேச்சுவார்த்தைகளை முடித்து நேற்று திருமணத்தையும் நடத்தி முடித்துள்ளனர். அதனால் இனி அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் சம்பந்திகள் ஆகியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்த நிலையில் அவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நேற்று நடந்து முடிந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே தம்பி ராமையா தனது மருமகளுக்கு ஒரு கண்டிஷனை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கண்டிஷனை அர்ஜுனும் ஐஸ்வர்யா அர்ஜுனும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது என்னதான் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து திரையுலகில் கலக்கி வந்தாலும் திருமணத்திற்குப் பிறகு அர்ஜுன் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என தம்பி ராமையா கண்டிஷன் போட்டதாகவும் அதற்கு அர்ஜுனும், ஐஸ்வர்யா அர்ஜனும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.