உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு சுவாரஷ்யமான நிகழ்வுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாக பரவி வருகிறது.அதில் ஒன்று தான் பிரதமர் மோடி AI எனப்படும் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி இந்தியில் பேசும் பேச்சை தமிழில் மொழி மாற்றம் செய்யும் முயற்சியை முதல் முறை பயன்படுத்தி இருந்தார்.அப்போது பேச்சின் இடையே அது குறித்து விளக்கம் கொடுத்த பிரதமர் மேடையில் இருந்த அண்ணாமலையை நோக்கி ITS OK ANNAMALAI என கேட்டார். இந்த வீடியோ தற்போது கடும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இது ஒரு புறம் என்றால் இந்த நிகழ்வு குறித்து அண்ணாமலை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில்,
நமது மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களால் நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் பலனடைவதே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முன்னுரிமையாகும். நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் KashiTamilSangamam தொடக்க விழாவில் பேசும்போது, தமது உரையின் நேரடி மொழிபெயர்ப்பை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முயற்சித்தார்.நமது மாண்புமிகு பிரதமரின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் கேட்கும் வாய்ப்பு, எனக்கும், நமது முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு L முருகன் அவர்களுக்கும் மற்றும் தமிழ் மாணவர்களுக்கும் கிடைத்தது ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது.நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், முதன்முறையாக இந்த செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்.இந்த தொழில்நுட்பம், மொழி வேறுபாட்டினை நீக்கி, தேச நலனுக்கான நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் தொலை நோக்குப்பார்வையின் பலன்கள், தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் அடைவதை உறுதி செய்யும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.